கடந்த 1760 ஆம் ஆண்டு மன்னர் மூன்றாம் ஜோர்ஜ் இங்கிலாந்து அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்தார். மன்னருக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் வருவாயை அரசே நிர்வகித்துக் கொள்ள இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இதற்காக, ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் மன்னர் குடும்ப த்துக்கு வழங்க வேண்டும்.
இதன்படி, இங்கிலாந்து அரசு ராணியின் அலுவலக செலவுக்காக இப்போது ஆண்டுக்கு இந்திய ரூபாய் ரூ.53.72 கோடி வழங்குகிறது. இந்த தொகை ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒரு முறை உயர்த்தப்பட வேண்டும். ஆனால் கடந்த 1990இற்கு பிறகு உயர்த்தப்படவில்லை.
வழக்கப்படி, இந்த ஆண்டு ராணிக்கான செலவுத் தொகை உயர்த்தப்பட வேண்டும். ஆனால் நிதிநெருக்கடியால் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளதால், சிக்கன நடவடிக்கையை கடைபிடிக்க இங்கிலாந்து அரசு திட்ட மிட்டுள்ளது. இதன்படி, ராணிக்கான சம்பள உயர்வையும் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக