வியாழன், 17 ஜூன், 2010

மரணத்தின் விளிம்பில் ஊசலாடும் உலகின் வயதான தாயின் உயிர்

உலகின் வயதான தாயான இந்தியாவைச் சேர்ந்த ரஜோ தேவி லோஹன் (72 வயது), பெண் குழந்தை யொன்றை பெற்றெடுத்து ஒன்றரை வருடங்கள் ஆகிய நிலையில் தனது மரணத்துக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

சோதனைக் குழாய் மூலம் சர்ச்சைக்குரிய முறையில் குழந்தையை பிரசவித்த ரஜோ தேவி, மேற்படி பிரசவத்தால் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய உடல் பலவீனமாக காணப்பட்டதால் அவருக்குத் தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாது மருத்துவர்கள் திணறினர்.


ரஜோ தேவி விபரிக்கையில், ““ஒரு குழந்தைக்கு தாயாக வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவாக இருந்தது. இந்த பிரசவத்தால் உடல் நலப் பாதிப்புக ளுக்கு உள்ளானமை குறித்து நான் கவலைப்பட வில்லை. ஏனெனில் நான் ஒரு தாயாக மாறும் வரையாவது உயிர் வாழ்ந்து விட்டேன்'' என்று தெவித்தார்.

70 வயதில் குழந்தையைப் பெற்ற ரஜோ தேவி, தான் பெற்றெடுத்த குழந்தையை அன்பாகத் தூக்கிக் கொஞ்சக்கூட முடியாத அளவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார்.

ரஜோ தேவியும் அவரது கணவரான பல்லாவும் (73 வயது) கல்வியறிவற்ற விவசாயக் குடும்ப மொன்றைச் சேர்ந்தவர்களாவர். வயோதிப வயதில் குழந்தையொன்றைப் பிரசவிப்பது அபாயகரமானது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இந்திய பத்துபட்டி கிராமத்தைச் சேர்ந்த மேற்படி தம்பதி, சோதனைக்குழாய் முறையில் குழந்தை யொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக 2,000 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான கட்டணத்தைக் கடனாகப் பெற்றே செலுத்தியுள்ளனர்.
““நான் முன்பு மிகவும் ஆரோக்கியமாக இருந்தேன்.

குழந்தைப் பிரசவத்தின் பின் நான் நோயாளியாகி விட்டேன். என்னுடைய இந்த வயதில் குழந்தை யொன்றைப் பிரசவிப்பது ஆபத்தானது என்று மருத்துவர் ஒருபோதும் என்னை எச்சரிக்கவில்லை'' என ரஜோதேவி கூறினார்.

அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையைப் பெற்ற ரஜோ தேவி, அவரது கருப்பையில் வெடிப்பு ஏற்பட்டதால் கடும் உள்ளக இரத்தக் கசிவால் துன்பப்பட்டார். இந்நிலையில், கருப்பையில் தோன்றிய தோடம்பழம் அளவான இரத்தக் கட்டியை அகற்ற அவருக்கு இரு தடவைகள் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடல் பலவீனமாக இருந்ததால் அந்த அறுவைச் சிகிச்சைகளின் மூலம் பயன் கிடைக்கவில்லை.

இதனையடுத்து, தீராத வலியிலும் வேதனையிலுமிருந்து விடுபட தினசரி வலிநீக்கி மருந்துகளை தஞ்சமடையும் நிலைக்கு ரஜோ தேவி உள்ளாகியுள்ளார்.

ரஜோதேவி நோயால் படுத்த படுக்கையாக இருக்க நேர்ந்ததையடுத்து, அவரது சகோதரி ஒமியே (60 வயது) சின்னஞ் சிறு குழந்தையான நவீனை பராமரித்து வருகிறார்.
பெல்லா இது தொடர்பில் கூறுகையில், ““எமது மரணத்திற்கு பின் எவர் எமது மகளைக் கவனித்துக் கொள்வார்கள் என்பதை நினைக்க எமக்கு கவலையாக இருக்கிறது'' என்று தெவித்தார்.
ரஜோதேவிக்கு சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள உதவிய மருத்துவரான அனுரக் பிஷ்னோயி, ரஜோ தேவியின் பிரசவத்திற்கும் அவரது உடல்நலப் பிரச்சினைக்கும் தொடர்பில்லை என வாதிட்டு வருகிறார்.

இந் நிலையில், லண்டன் பெண்கள் மருத்துவ மனையின் மருத்துவப் பராமப்பாளரான பீற்றர் போ வென் விபரிக்கையில், 70 வயதிற்கு மேற்பட்ட எந்த வொரு பெண்ணும் கருத்தரிப்பது அபாயகரமானது என்று கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல