வியாழன், 17 ஜூன், 2010

வெளியுலக வாழ்க்கை வெறுத்ததால் சிறைக்கு மீளத்திரும்பிய கைதி

10 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து விடுதலை செய்யப்பட்ட கைதியொருவர் வெளியுலக வாழ்க்கை பிடிக்காததால் சிறைச்சாலை மதிலை உடைத்து மீளவும் உட்பிரவேசித்த சம்பவம் மொசாம்பிக்கில் இடம்பெற்றுள்ளது.

மத்திய மொசாபிக்கிலுள்ள மனிகா எனும் இடத்தைச் சேர்ந்த கமிலோ அந்தோனியோவுக்கு (Camilo Antonio, 28) 2004 ஆம் ஆண்டில் தனது மாற்றாந் தந்தையை கொன்ற குற்றச் சாட்டுக்காக 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சிறைவாசம் அனுபவித்து விடுதலையான கமிலோ அந்தோனியோவுக்கு வேலையொன்றைத் தேடிக் கொள்வதற்கு சிரமமாக இருந்ததுடன் தனது மாற்றாந் தந்தையின் குடும்பத்தினரால் கொல்லப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.

இந்நிலையில் சிறைச்சாலை மதிலின் கீழ்ப் பகுதியில் துளையொன்றை ஏற்படுத்தி அவர் மீளவும் சிறைச்சாலைக்குள் நுழைந்துள்ளார்.

தற்போது பொது சொத்துக்கு (சிறைச் சாலை மதில் சுவருக்கு) சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கமிலோ அந்தோனியாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கமிலோ அந்தோனியோ விபக்கையில், ““எனக்கு சிறைச்சாலையே பாதுகாப்பான இடமாக உள்ளது'' நான் முன்பு சிறையில் இருப்பதை ஒரு போதும் விரும்பியதில்லை. ஆனால் தற்போது எனது வாழ்க்கைக்கு சிறைச்சாலையே மிகச் சிறந்த இடமென்று தோன்றுகிறது'' என்று கூறினார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல