வியாழன், 17 ஜூன், 2010

மலேசிய மனைவியிடமிருந்து புருனே சுல்தான் விவாகரத்து

உலகில் மிகப் பெய செல்வந்தர்களில் ஒருவரான புருனே சுல்தான், தனது மலேசிய மனைவியான அஸ்ரினாஸ் மாஸர் ஹக்கீமை ( Azrinaz Mazhar Hakim, 30) விவாகரத்து செய்துள்ளார்.

புருனே சுல்தான் ஹஸனல் போல்கியா, 2005 ஆம் ஆண்டில் முன்னாள் மலேசிய தொலைக்காட்சி ஊடகவியலாளரான அஸ்ரினாஸை திருமணம் செய்தார்.

அஸ்ரினாஸ் திருமணமாகிய ஒருவருடம் கூட பூர்த்தியடையாத நிலையில் ஆண்குழந்தையொன்றை பெற்றெடுத்தார். இது சுல்தானுக்கு 11 ஆவது குழந்தையாகும். தொடர்ந்து 2008 ஆம் ஆண்டில் அஸ்ரினாஸ் பெண் குழந்தையொன்றுக்கு தாயானார்.

இந்த நிலையில் சுல்தான் அஸ்ரினாவை விவாகரத்து செய்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க ஊடகங்களில் புதன்கிழமை அறிவிப்புச் செய்யப்பட்டது. எனினும் இந்த விவாகரத்துக்கான காரணம் குறித்து அறிவிக்கப்படவில்லை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல