வியாழன், 17 ஜூன், 2010

மைக்ரோசொஃப்ட் நிறுவனம் எச்சரிக்கை

மைக்ரோசொஃப்ட் நிறுவனம் அண்மையில் ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது. மைக்ரோசொஃப்ட் விண்டோஸ் 2000, எக்ஸ்பி சிஸ்டங்களில் ஒன்றை இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பதிப்பு 7 அல்லது 8 சேர்த்துப் பயன்படுத்துபவர்கள் எஃப்1 கீ எனப்படும் ஹெல்ப் கீயை அழுத்தினால், ஹேக்கர்கள் எளிதாக கொம் ப்யூட்டர்களில் புகும் வாய்ப்பு உண்டு என அறிவித்துள்ளது.

இந்த ஒப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஏதேனும், ஒரு பொப் அப் விண்டோவினைத் திறந்து, உதவிக்கு எஃப் 1 கீயினை அழுத்துமாறு ஹேக்கர்கள் வடி வமைத்திருப்பார்கள். அவ்வாறு அழுத்துகையில், அவர்கள் வேறு ஒரு இணையப் பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மோசமான புரோகிராம் வரிகள் வழியாக, கணனி கட்டுப்பாடு ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்று விடும்.
இவ்வளவும் ஒப் பரேட்டிங் சிஸ்டம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்புகளில் உள்ள பிழை உள்ள தொகுப்பு வரிகளே காரணமாகும். இது குறித்த எச்சரிக்கையை மைக்ரோசொஃப்ட் வழங்கியுள்ளது.

யாரும் இதுபோல பொப் அப் விண்டோ எச்சரிக்கையைத் தொடர்ந்து எஃப்1 கீயை அழுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான பேட்ச் பைல் ஒன்றைத் தரும் யற்சியிலும் இறங்கியுள்ளது. இந்த எச்சரிக்கையைப் படித்த பலர், நமக்கு எதுக்கு வம்பு, பிரவுசரையே மாற்றி விடுவோம் என இன்டர்நெட் எக்ஸ் புளோரரை விடுத்து ஏனைய பிரவுசர்களுக்கு மாறி வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல