80க்கும் அதிகமான தாவர இனங்களிலிருந்து பெறப்பட்ட 60 வகையான நுண்மூலக் கூறுகளை இந்த குடிபானம் உள்ளடக்கியுள்ளதாக அந்நாட்டின் அரசாங்க ஊடகமுகவர் நிலையமான “கே.சி.என்.ஏ.' செய்தி வெளியிட்டுள்ளது.
பழப்பான நிறுவனமொன்றுடன் கூட்டிணைந்தே வடகொரிய அரசாங்கம் இந்த குடிபானத்தை தயாரித்துள்ளது. இந்த குடிபானம் மூளைக் கலங்களை விருத்தியடையச் செய்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன் தோல் சுருக்கங்களும், கரும் புள்ளிகளும் ஏற்படாது உடலைப் பாதுகாக்கிறது எனவும் பக்க விளைவுகள் அற்றது எனவும் தெவிக்கப்படுகிறது.
இந்த குடிபானத்தை மின்சக்தி நிலையங்கள் போன்ற தொழிற்றுறைகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்களுக்கும் மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கும் வழங்கிப் பரிசோதித்த போது சிறந்த பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றதாக கூறப்படுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக