ஞாயிறு, 6 ஜூன், 2010

போலீசில் புகார் செய்ததால் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலம்

தன்னை கேலி செய்ததாக சிலர் மீது போலீசில் ஒரு பெண் புகார் செய்தார். இதனால், ஆத்திரமடைந்த கும்பல், அந்த பெண்ணை கிராமத்தில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்தியது.

இந்த கொடுமையான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு: உ.பி. மாநிலம் அலிகார் நகரில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது சந்துகா என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிர்மா தேவி (45). கடந்த 2ம் தேதி இவர் கோயிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, சிலர் இவரை கேலி செய்துள்ளனர். இது பற்றி பிர்மா தேவி போலீசில் புகார் செய்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் அந்த கும்பல், பிர்மா தேவியை தேடி கண்டுபிடித்து அடித்து உதைத்தது. பின்னர் அவரை நிர்வாணமாக்கி கிராமத்தில் ஊர்வலமாக அழைத்துச் சென்றது.

மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மூல்சந்த் பாகல் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பெண்ணை அடித்து உதைத்தது உண்மை. ஆனால், அவரை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லவில்லை என்று போலீஸ் அதிகாரி மான் சிங் சவுகான் தெரிவித்தார். அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக உண்மையை போலீசார் மறைப்பதாக பிர்மா தேவியின் கணவர் பிர் சிங் குற்றம்சாட்டினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல