Handwritten lyrics to the 1983 hit "Beat It," scribbled on a piece of paper, went for $60,000.
பாப் பாடகரான மைக்கேல் ஜாக்சன், கடந்த ஆண்டு மர்மமான முறையில் இறந்தார்.
அவரது முதலாமாண்டு நினைவு நாள் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. அப்போது அவர் அணிந்திருந்த ஆடைகள், அவர் கையெழுத்திட்ட காகிதங்கள் மற்றும் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. அவர் அணிந்திருந்த வேலைப்பாடு மிக்க மேல்சட்டை ஒன்று மூன்று லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 57 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
Jackson's fedora, which he wore at the 1995 MTV Music Awards, sold for $73,800.
அதேபோல், அவரது "ஆட்டோகிராப்' 10 லட்ச ரூபாய்க்கும், அவர் எம்.டிவியில் கலந்து கொண்ட "மூன்மேன்' நிகழ்ச்சியில் விருது வழங்கும் காட்சி கொண்ட வீடியோ 21 லட்ச ரூபாய்க்கும் ஏலத்தில் விற்பனையானது.
இவையனைத்தும் நினைத்ததை விட ஆறு மடங்கு அதிகமான விலையில் விற்பனையாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக