ஞாயிறு, 27 ஜூன், 2010

உலகில் முதல் தடவையாக பூனைக்கு செயற்கை இலத்திரனியல் கால்கள்

அறுவடை இயந்திரமொன்றில் சிக்கி தனது இரு பின்னங் கால்களையும் இழந்த பூனையொன்றுக்கு செயற்கை இலத்திரனியல் கால்களைப் பொருத்தி பிரித்தானிய மிருக வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.


உலகிலேயே பூனையொன்றுக்கு செயற்கை இலத்திரனியல் கால்கள் பொருத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும். இந்த புரட்சிகரமான சத்திரசிகிச்சை சுர்ரே நகரைச் சேர்ந்த நோயல் பிட்ஸ் பற்றிக் ( Noel Fitzpatrick)தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

ஒஸ்கார் என்ற இந்தப் பூனைக்கு பொருத்தப் பட்ட கால்களை லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழுவினர் உருவாக்கியிருந்தனர்.2005ஆம் ஆண்டு லண்டன் குண்டுத் தாக்குதலில் கரத்தை இழந்த பெண்ணுக்கு செயற்கை கரத்தை உருவாக்கப் பயன்ப டுத்தப்பட்ட தொழில்நுட்பம் இதற்காக உபயோகிக்கப்பட்டுள்ளது.




Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல