ஞாயிறு, 27 ஜூன், 2010

அழகு

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அந்த முகம் அழகாக இருக்க வேண்டுமா? இங்கே கொடுத்துள்ள அழகுக் குறிப்புகளை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.

தூய்மையான சந்தனம், கடுக்காய் 4, கசகசா 2 டேபிள்ஸ்பூன், பாதாம் பருப்பு இவைகளால் தயாரித்த கலவையினை ஃபேஸ் பேக் ஆக பயன்படுத்தலாம்.

கடைகளில் ஃபேஸ் மாஸ்க் பொடி விற்கும்.
அதை வாங்கி ஒரு ஸ்பூன் மாஸ்க் பொடியில் சிறிது வெள்ள, கரட், தயிர் சேர்த்துக் குழைத்து பூசி 20 நிமிடம் ஊறியதும் கழுவிவந்தால் முகம் பளிச்சென்று இருக்கும். வாரத்திற்கு ஒரு முறை செய்தால் போதும்.

வெள்ளச்சாறும் புதினாச்சாறும் கலந்து முகம், கைகளில் தேய்த்து வரலாம்.குளிர்காலத்தில் படுக்கும் முன், கத்தில் மொயிஸ்சரைஸர் பூசுவது நல்லது.
கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணெய் தேய்த்து வருவதால் முடிகள் பளிச்சென்று கருமையாக வளரும்.

முட்டைக்கோஸ், முள்ளங்கிச்சாறுகளும் முகத்தை பளிச்சென்றாக்க உதவும்.

வாரமொருறை தலைக்கு முட்டை தேய்த்து குளிப்பது நல்லது.

கை கால் நகங்களைச் சுத்தமாக வெட்டி, வெதுவெதுப்பான நீரில் சோப் துண்டுகளை போட்டு, கொஞ்ச நேரம் அமிழ்த்தி வைத்து பழைய துணி கொண்டு சுத்தம் செய்து, நெயில்பொலிஷ் போட்டு வந்தால் பார்க்க அழகாக இருக்கும்.

கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினம் போட்டு வரவும்.

உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம் முன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும்.

உதட்டில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் ஷைனிங்காக இருக்கும்.

முகத்தின் எண்ணெய் பசை நீங்க ட்டையின் வெண்கரு 7 ஸ்பூன், தேன் கால் ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூன் மூன்றையும் கலந்து அரை மணி நேரம் பூசிவிட்டு முகம் கழுவினால், எண்ணைப் பசை நீங்கிவிடும்.

முக வறட்சி நீங்க பச்சை கொத்தமல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து அலம்ப வேண்டும்.

முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளி மறைய ஜாதிக்காயை அரைத்துப் போடவும்.

பூண்டு அல்லது கருந்துளசியை அரைத்துப் போட நாளடைவில் முகப்பருக்கள் மறையும்.

புதினா கீரையைக் காய வைத்து பொடி செய்து பல் துலக்குவதால் வாய் நாற்றமின்றிப் பல் பளிச்சென்றிருக்கும்.

இரவு நேரத்தில் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன், பல் வெண்மை பெறும்.

பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து பொடித்து கைகளில் தேய்த்து வந்தால் கை மிருதுவாக இருக்கும்.

நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணெய்யை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.

வெள்ளைக் குன்றிமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக அரைத்து மார்பகங்களின் மீது பூசிவர, தளர்ந்த மார்பகம் சரியான வடிவம் பெறும்.

ஆவரம் பூவை நிழலில் உலர்த்தி, சமமான அளவு பயத்தம் மாவு கலந்து அரைத்து தினம் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும். பப்பாளிக் காயை பொரியலோ, குழம்பு வைத்தோ வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் ன்றையும் கலந்து வெந்நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.

பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதைக் கண்களில் வைக்க கண்களைச் சுற்றி ஏற்படும் கருவளையம் மறையும்.

பப்பாளி பழத்தை அரைத்து, முகத்தில் தொடர்ந்து தடவி வர முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறையும்.

மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

ஒரேஞ் பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.

பால், கடலைமா, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவிக் குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

சரும அழகை மேம்படுத்தும் டைட்னிங் மாஸ்க்கை பெண்கள் வீட்டிலே தயாரிக்கலாம்.

முட்டையின் வெள்ளைக்கரு, முல்தானிமிட்டி, தேன் மூன்றையும் கலந்தாலே போதும். வறண்ட சருமமாக இருந்தால் சிறிதளவு பால் சேர்த்துக் கொள்ளலாம். இதை பயன்படுத்தினாலே போதும் அழகு பளிச்சிடும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல