புதன், 7 ஜூலை, 2010

16 வயதுக் குழந்தை!

பதினாறு வயது என்பது இளமையின் அழகுகள் பூத்துக் குலுங்கத் தொடங்கும் பருவம். இந்த வயது யுவதிகளை சுற்றி இளைஞர் பட்டாளமே பின்னால் திரியும். ஆனால் புரூக் எனும் 16 வயது யுவதியை யாருமே அவ்வாறு வளைய வருவதில்லை. செல்லமாக கொஞ்ச மட்டுமே செய்கிறார்கள்.


புரூக் கிரீன் பேர்க் எனும் 16 வயது யுவதிக்கு இன்னும் இரண்டு வயது கூட ஆகவில்லை. என்ன குழப்பமாக இருக்கிறதா? ஆம் இவரின் வயது 16. ஆனால் நேரில் பார்த்தால் 2 வயது சிறுமியைப் போன்ற தோற்றமே காணப்படுகிறது.

இந்த அதிசயச் சிறுமியின் எடை வெறும் 16 பவுண்ட் தானாம். உயரம் 30 அங்குலங்கள். அதிசய நோய் ஒன்று தொற்றியுள்ளதால் இவரின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உடல் வளர்ச்சிக்குத் தேவையான மூளை வளர்ச்சி குறுகிய அளவே இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக உடம்பின் பெரும்பாலான பகுதிகள் ஒரே அளவாக வளர்ச்சி இன்றி உள்ளதாம்.

ஏனைய யுவதிகள் போல் பட்டாம்பூச்சியாக வலம்வர வேண்டிய புரூக் தனது சகோதரிகளின் (அவளை விட வயது குறைந்த) கைகளில் சின்னக் குழந்தையாக தொத்திக் கொண்டிருக்கிறாள். இவளின் உடல் வளர்ச்சி தடைப் பட்டுள்ளதால் இனியும் இவள் வளர்வது சந்தேகம் தானாம்.

வளர்ந்த பின்னர் பிள்ளைகள் செய்யும் குறும்புகள் காரணமாக தமது பிள்ளைகள் சின்னவர்களாக இருந்தால் எவ்வளவு நல்லது என சில பெற்றோர் நினைப்பதுண்டு.

ஆனால் அதுவே உண்மையாகியுள்ள போதும் புரூகின் பெற்றோர் இவள் குழந்தையாகவே இருப்பதை பார்த்து மகிழ்ச்சி கொள்ளவில்லை. உலகில் இத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டு வளராமல் இருப்பது இவள் மட்டும்தான்.


- ஷம்ஸ் பர்ஹத்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல