புதன், 7 ஜூலை, 2010

இணைப்பைத் துண்டித்தாலும் இயங்கும் அதிசய இதயம்

காதலர்களை பிரித்தாலும் அவர்களின் உள்ளங்களின் பிணைப்பை யாராலும் துண்டிக்க முடியாது என்பர்.

அதனால்தான் போலும் காதல் சின்னமாக இதயத்தை குறிப்பிடுகின்றனர். ஏனென்றால் இதயமும் காதலர்கள் போலத்தான் அதன் இணைப்புகள் அனைத்தையும் துண்டித்து விட்டா லும் கூட இதயம் தொடர்ந்து இயங்குமாம்.

மனிதன் உலகில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் இதயம் மிகவும் பிரதானமானது. இதயம் தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டு டொன் எடையுள்ள பொருளை தரையில் இருந்து 2 அடி உயரத்துக்கு தூக்க முடியும்.

இதயம் ஒவ்வொரு முறை சுருங்கும் போதும் உடலில் உள்ள மொத்தம் சுமார் பத்தாயிரம் மைல் நீளம் உள்ள ரத்தக் குழாய்களினூடாக ரத்தத்தை அனுப்புகிறது.

மருத்துவர்களால் புரிந்து கொள்ள முடியாத சில புதிரான ஆற்றல்களை இதயம் பெற்றுள்ளது. இதயத்தைப் பிணைத்திருக்கும் பலவகையான நரம்பு அமைப்புகளை முழுமையாகத் துண்டித்து விட்டால் கூட, இதயம் எந்தவிதமான பாதிப்புமின்றி தானாகவே இயங்கும் ஆற்றல்பெற்றுள்ளது.

ஒவ்வொரு நாளும் இதயம் ஒரு லட்சம் முறை விரிந்து சுருங்குகிறது.

இந்தக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 70 ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயம் 25 ஆயிரம் கோடி முறை சுருங்கி விரிகிறது.

ஒரு நாளில் இதயம் 1800 கலன் (7200 லீட்டர்) ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது. இதனை கணக்கிட்டால் இதயம் ஒரு மனிதனின் வாழ் நாளில் சுமார் 4.6 கோடி கலன் ரத்தத்தை உடலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது.

இதயத்தின் ஆற்றலானது ஒரு குதிரையின் ஆற்றலில் 240 இல் ஒரு பங்கு என்றால் நம்ப முடியுமா?

இதயம் ஓர் ஆண்டில் வெளியேற்றும் ரத்தத்தின் அளவானது 6.5 லட்சம் கலன்கள். இந்த அளவு ரத்தத்தைக் கொண்டு 900 கலன் அளவுள்ள 72 லொறிகளை நிரப்ப முடியுமாம்.

உங்கள் காதலியின் மனைவியின் ஏன் நண்பரின் இதயத்தை அறிய முன் உங்கள் இதயத்தைப் பற்றி அறிந்து கொள்வது நல்லதல்லவா?Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல