கிம் (Kim) என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் இந்த பேராசி யர் வழமையான குழாய் நீரை பிரான்ஸின் லோர்டஸிலுள்ள (Lourdes) புனித நீரின் உள்ளடக்கங்களைக் கொண்ட நீராக மாற்றும் அற்புத உபகரணங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்து தன்னால் உருவாக்கப்பட்ட உபகரணங்களை சுமார் 5000 பேரிடம் விற்பனை செய்துள்ளார்.
இதன் மூலம் அவர் 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வருமானத்தை ஈட்டி யுள்ளார். இந்த மோசடியுடன் தொடர்புபட்ட கிம்மின் மனைவி, மைத்துனர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லோர்ட்டஸிலுள்ள உலகப் பிரபல கன்னி மரியாள் நோய் களை குணப்படுத்துவார் என்று மத விசுவாசிகளிடையே நம்பிக்கை நிலவி வருகின்ற நிலையில், அந்த நம்பிக்கையை கிம் தனது மோசடிக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரிழிவு, கட்டிகள் போன்ற பல்வேறு நோய்களையும் குண ப்படுத்தக்கூடியவை என தெரிவித்து மென் கடதாசி வடிகட்டி, பிளாஸ்டிக் அட்டைகள் என்பவற்றை பயன்படுத்தி தயாரிக்கப் பட்ட வேறுபட்ட உபகரணங்களை கிம் விற்பனை செய்து வந்துள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக