வியாழன், 5 ஆகஸ்ட், 2010

சின்ன சின்ன தகவல்கள்

கடல் உயிர்கள்:

கடலில் வாழ்வன என்றால் மீன், நண்டு, தாவரங்கள் தவிர சிப்பிகள் மட்டும் தான் நமது நினைவில் இருக்கும். ஆனால் கடலில் வாழும் உயிரினங்கள் நிறைய உண்டு. அதாவது கடல் அல்லி, கடல் தாமரை, அல்கா, நோநேரியா என்பவை அதில் முக்கியமானவையாகும்.

கடல் உயிர் என்று சொல்லிவிட்டு தாவரங்களின் பெயரைச் சொல்லுவதாக எண்ண வேண்டாம். இவை அனைத்தும் கடல் வாழ் உயிரிதான்.


கடல் அல்லி:

கடல் அல்லி என்பது, கடல் நீரில் ஒரே இடத்தில் ஒட்டிக் கொண்டு வசிக்கும். முன் பகுதியில் வாயைச் சுற்றி பல கைகள் காணப்படுகின்றன. இவை இரையைப் பிடிப்பதற்கும், எதிரிகளிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கும் பயன்படுத்துகின்றன.

பார்ப்பதற்கு செடி போன்று காட்சி அளிக்கும் இது ஒரு அரிய வகை உயிரியாகும். அதன் அருகில் வரும் மீன்களை பிடித்து உண்ணும்.


கடல் தாமரை

கடல் தாமரையின் வாய்ப் புறத்தைச் சுற்றிக் காணப்படும் கைகள் ஒரு தாமரை மலரின் இதழ்கள் போன்று தோற்றமளிக்கும். இது ஓர் ஈரடுக்கு உயிரி.

முனிவன் எனப்படும் உயிரியோடு இது கூட்டு வாழ்க்கை நடத்துகிறது. இது தன் அடிப்பகுதியை துறவி நண்டின் ஓட்டின் மீது ஒட்ட வைத்துக் கொள்கிறது. இதனால் நன்டு நகர்ந்து செல்லும் இடங்களுக்கெல்லாம் இதனால் செல்ல முடிகிறது.

அதனால் இவ்வுயிரியின் உணவுப் பிரச்சினை தீர்க்கப்படுகிறது. இதனிடமுள்ள கொட்டும் செல்கள் என்ற தனிச்சிறப்பு வாய்ந்தவை. இதனால் உயிரிகளைப் பிடிக்கவும் முடியும். எதிரிகளை அழிக்கவும் முடியும்.


யானைகள்

o யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை (அடடா எலும்பு இல்லாமலேயே இவ்வளவு வலிமையா என்று வியப்பாக உள்ளதா?)

o யானைக்கு கிட்டப் பார்வை மட்டும்தான் உள்ளதாம். (நாம் இனிமே கொஞ்சம் தூரமாகவே நின்னுக்குவோம் என்ன?)

o இந்திய பெண் யானைகளுக்கு தான் தந்தம் கிடையாது. ஆனால் ஆபிரிக்க பெண்யானைகளுக்கு தந்தம் உள்ளது.

o பொதுவாகவே பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பதே கிடையாதாம்.

o யானைகளுக்கு என்று ஒரு மருத்துவமனை கேரளாவில் உள்ளது.

o யானையின் இரண்டு தந்தங்களும் சம அளவில் இருப்பதில்லை.

o யானைக் குட்டிக்கு 3 முதல் 5 வயதுக்குள் தந்தம் முளைக்கிறது.


உயிரினங்கள் சில:


o மின்மினிப் பூச்சியின் முட்டையும் ஒளிவீசும் தன்மை கொண்டது.

o பறக்காத பறவை பென்குவின் இது கடல் கோழி என்று அழைக்கப்படுகிறது.

o பாம்பே டேக் என்பது ஒரு வகை மீனின் பெயராகும்.

o கடல் ஆமை மணிக்கு 35 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும்.

o ஆண் குதிரைக்கு 36 பற்கள் உண்டு.


o மிக நீண்ட ஆயுள் கொண்ட விலங்கு ஆமை. சுமார் 200 ஆண்டுகள் வரை வாழக் கூடியது.

o கங்காரு இருந்த இடத்திலிருந்து தாண்டும் தூரம் 7 மீட்டர்.

o நீர் வாழ் பாலூட்டி இனங்களில் அதிக பற்கள் கொண்டது திமிங்கிலம்தான். எவ்வளவு இருக்கும் என்று நினைக்கின்aர்கள். சுமார் 260 பற்கள்.

o விலங்குகளில் அதிக பற்கள் உடையது நாய்தான். மொத்தமாக 42 பற்கள் இருக்குமாம்.

o மீன்களின் அரசன் என்று அழைக்கப்படுவது சுறா மீன்.

o ஒட்டகச்சிவிங்கி நாக்கு ஒன்றரை அடி நீளத்துக்கு மேல் இருக்கும்.

o நெருப்புக் கோழியின் கண்கள் அதன் மூளையின் அளவை விடப் பெரியதாக இருக்கும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல