வியாழன், 5 ஆகஸ்ட், 2010

தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்.

ஜப்பான் நாட்டு தட்டெழுத்து இயந்திரத்தில் மொத்தம் 2.863 எழுத்துக்கள் உள்ளன.

அவுஸ்திரேலியாவில் காணப்படும் காணாங்குருவி என்ற பறவையினக் குஞ்சு முட்டையில் இருந்து வெளியில் வந்ததும் பறக்கத் தொடங்கிவிடும்.

தொடர்ந்து மூன்று நான்கு ஆண்டுகள் கூட பறக்கும் திறனுடைய பறவை குட்டிடேர்ன்.

குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உள்ளன. ஒன்று உடலையும் மற்றது வாலையும் நிர்வகிக்கின்றது.

18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பட்டாசு வெடிக்கும் உரிமை இராணுவத்தினருக்கு மட்டுமே இருந்தது.

பிகாலோ என்ற மீன் பின்புறமாகவும் நீந்தும்.

யானை தன் துதிக்கையில் 9 லீட்டர் நீரை உறிஞ்சிக் கொள்ளும்.

ஒரு சிலந்தியின் வலை சுமார் 2000 மைல் நீளத்திற்கு வரும்.

யானைகள் குறும் பார்வை உடையவை. தொலைதூரத்தில் இருப்பவை எதுவும் அதன் கண்களுக்குத் தெரியாது.

சுறா மீனின் உடலில் உற்பத்தியாகும் ஒருவகை இரசாயனத் திரவம் மனித உடலில் பட்டால் உடனே தோல் வெந்துவிடும்.

தேனீக்கள் ஒரு கிலோ தேனை உற்பத்தி செய்ய 50 லட்சம் பூக்களில் அதனை உறிஞ்சுகின்றன. இவை வாழ்நாளில் பறக்கும் மொத்த தூரம் பூமியை 4 முறை வலம் வந்ததற்கு சமமானதாகும்.

இந்தியாவின் மிக உயரமான ரெயில் நிலையம் குங் ரெயில் நிலையம்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள பிரபலமான ஈபில் டவரை வடிவமைத்தவர் கஸ்டவ் ஈபில், அவர்தான் அமெரிக்காவில் உள்ள சுதந்திரதேவி சிலையையும் வடிவமைத்தவர்.
உலகில் மிக அதிக மக்களால் பேசப்படும் மொழி சீன மொழியான மண்டாரின்.

உலகிலேயே மிக வேகமாக ஓடும் பூச்சி இனம் கரப்பான் பூச்சி. ஒரு கரப்பான் பூச்சி மணிக்கு 4.28 கிலோ மீற்றர் வேகத்தில் ஓடும்.

உலகிலேயே முதன் முதலில் இங்கிலாந்தில்தான் எட்வேர்- பரீஸ்டன் தெருக்களிடையே 1863 ல் பாதாள ரயில் விடப்பட்டது.

உலகில் அதிக வேகமாக காற்று வீசக்கூடிய பகுதி அந்தாட் டிக்காவின் கொமன்வெல்த் பே.

பிலிப்பைன்ஸ் நாட்டுக் கடலில் 1934 ம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய முத்து கிடைத்தது. அதன் நீளம் 24 செ.மீ. விட்டம் 14 செ.மீ.

வெள்ளை மாளிகையில் வசிக்காத ஒரே அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் வொஷிங்டன்.

சேக்ஷ்பியர் எழுதிய கடைசி நாடகம் ‘த டெம்ப்ஸ்ட்’

76 ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் வால் நட்சத்திரம் ஹாலி.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல