திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பிரசார நிதியை அதிகரித்துக் கொள்ள மார்பக பிளாஸ்ரிக் சிகிச்சை

வெனிசுலா அரசியல்வாதியொருவர் தனது பிரசார நடவடிக்கை களுக்கான நிதியை அதிகரிக்க விநோத வழிமுறையொன்றை கையாண்டுள்ளார்.

6 டொலருக்கு சிறிது குறைவான சீட் டொன்றை கொள்வனவு செய்பவர்கள், பெரும் செலவு மிக்க மார்பகங்களை பெரிதாக்கும் அறுவைச் சிகிச்சையை இலவசமாக மேற்கொள்ளும் வாய்ப்பை பரிசாக பெறமுடியும் என குஸ்டாவோ ரொஜஸ் என்ற மேற்படி அரசியல்வாதி அறிவிப்புச் செய்துள்ளார்.

வெனிசுலாவில் மார்பகங்களைப் பெரிதாக்கும் அறுவைச் சிகிச்சையானது பெரிதும் பிரபலம் பெற்று வருகிறது. அங்கு அண்மைக் காலமாக வருடாந்தம் 30,000 பெண்கள் மார்பகங்களை பெரிதாக்க அறுவைச் சிகிச்சை செய்து கொள்வதாக அந்நாடு பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சை சபை தெரிவிக்கிறது.

இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் 26 ஆம் திகதி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் குஸ்டாவோ ரொஜஸ், மக்களின் சேவையை தனக்கு சாதகமாக்கும் வகையில் நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல