திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பெண்ணின் உடலில் ஆணி செலுத்திய சவூதி தம்பதியர் கைது

இலங்கைப் பணிப் பெண்ணான ஆரியவதியின் உடலில் ஆணி செலுத்தி துன்புறுத்திய தம்பதியர், சவூதி அரேபிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கைப் பணிப்பெண் மீது 24 ஆணிகளை அடித்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாகக் கூறப்பட்டு, மேற்படி தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர் பணி புரிந்த வீட்டுச் சொந்தக்காரரான 35 வயது ஆணையும் 29 வயதான அவரது மனைவியையுமே இவ்வாறு சவூதி அரேபிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தம்பதியினர் தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 28ம் திகதி பாதிப்புக்குள்ளாகிய பெண்மணிக்கு நியாயம் பெற்றுத் தருமாறு சவூதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பெண் வாக்குமூலம் அளிப்பதற்காக சவூதி அரேபியா செல்வார் எனவும் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் இலங்கை வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித் துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல