திங்கள், 16 ஆகஸ்ட், 2010

சமையல் நிபுணர்களுக்கு பெண்ணின் வயிற்றில் பூசணிக்காய் வெட்டும் சோதனை

சீனாவிலுள்ள உணவு விடுதியொன்று, சமையல் நிபுணர் வேலைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு விபரீதமான நேர்முகப் பரீட்சையை நடத்தியுள்ளது. ஒரு பெண்ணை மல்லாக்கப் படுக்க வைத்து, அப்பெண்ணின் வயிற்றில் பூசணிக்காயை வைத்து அதை கத்தியால் துண்டுகளாக வெட்டுமாறு சமையல் கலைஞர்கள் கோரப்பட்டனர்.

ஹபாய் மாகாணத்திலுள்ள ஹுபே உணவகம் ஒன்றிலேயே இந்த விபரீதப் நேர்முகப் பரீட்சை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 15 விண்ணப்பதாரிகள் இப்பரீட்சைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்கள் குறுகிய நேரத்தில் அப்பெண்ணுக்கு காயம் ஏற்படுத்தாமல் ஒரு பூசணிக்காயை சிறு துண்டுகளாக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது என்று உணவு விடுதியின் பேச்சாளர் தெரிவித்தார்.

சமையல் கலைஞர்கள் கத்தியைக் கையாளும் திறமையை சோதிப்பதே இதன் நோக்கம்.

இதில் 10 நிமிடங்களுக்குள் பூசணிக்காயை வெட்டிய சமையல் நிபுணர் ஹு குவா என்பவர் முதலிடம் பெற்றார்.

இந்த சோதனைக்கு முன்னர் நான் அதிக நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால், ஒரு பெண்ணின் வயிற்றில் வைத்து எதையேனும் வெட்டுவது இதுவே முதல் தடவையாகும் என்று அவர் தெரிவித்தார்.

நடுவர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "ஹு குவா மிகச்சிறப்பாக வேலையை செய்திருக்கிறார். இத்துறையில் அவர் 10 வருடங்;களுக்கு மேலாக இருப்பதாக கூறிக்கொள்ளலாம்" என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல