திங்கள், 16 ஆகஸ்ட், 2010

மேர்வினுக்குச் சனிமாற்றம் என்றால் மரத்தில் கட்டப்பட்டவருக்கு என்ன மாற்றம்?

அமைச்சுப் பதவியையும் கட்சியின் உறுப்பி னர் பதவியையும் இழந்த மேர்வின் சில்வா தனக்குச் சனி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாகவே பதவியிழந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியை எனது நண்பர் ஒருவருக்குத் தொலைபேசியில் கூறினேன். அதற்கு அவர் சோதிடத்தில் அப்படியேதும் இல்லை என்றார். எனக்கு எதுவும் புரியவில்லை. சனி மாற்றம் தனக்குச் சரியில்லை என்று மேர்வின் சில்வா கூறியதற்கும் சோதிடத்தில் அப்படியேதும் இல்லை என்று எனது நண்பர் கூறியதற்கும் என்ன தொடர்பு…?

இந்த குழப்பத்தைத் தெளிவுபடுத்துவதற்காக மீண்டும் தெளிவாகச் சொல்லுங்கள் என நண்பரிடம் கேட்டேன். அதற்கு அவர் கிரகங்களின் மாற்றத்தால் மற்றவர்களுக்குச் சாதக பாதக விளைவுகள் ஏற்படுமேயன்றி அந்தக் கிரகத்திற்கு எதுவும் நடக்காது என்றார். அவரின் இந்தப் பதில் என்னை மேலும் குழப்பத்திற்கு ஆளாக்கி விட, அதை விடுங்கள், பதவியிழந்த மேர்வின் சில்வாவுக்குச் சனி மாற்றம் சரியில்லை எனில், மேர்வின் சில்வாவால் மரத்தில் கட்டப்பட்ட அந்த அரச பணியாளருக்கு எந்தக் கிரகம் கூடாது என்று கேட்டேன்.

அதற்கு நண்பர் கூறினார், எல்லாம் சனி பார்வையின் விளையாட்டுத்தான் என்றார். எல்லா மே குழப்பம். சோதிடத்தில் போதிய அறிவின் மையால் நண்பரின் விளக்கத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் எனக்கில்லை. இருந்தா லும் அதை விடுவதாக இல்லை. மேர்வினுக்கு சனிமாற்றம் சரியில்லை. மேர்வினால் மரத்தில் கட்டப்பட்டவருக்கு சனி பார்வை சரியில்லை என்றால் எப்படி அதை விட்டு விடுவது?

தொலைபேசி காசை உறிஞ்சிக் குடித்தாலும் பரவாயில்லை, விளக்கம் கேட்டேன். ‘கெட்டவன் கெட்டால் கிட்டிடும் யோகம்’ என்று சோதிடம் கூறுகின்றது. கெட்ட கிரகங்கள் கெட்டுப் போக வேண்டும். அப்போதுதான் சாத கக்காரனுக்கு ‘சாதகம்’ ஏற்படும்.

மாறாக கெட்ட கிரகம் நல்ல இடத்தில் வலுப் பெற்று-ஆட்சி பெற்று-பதவி பெற்று இருக்கு மாயின், சாதகக்காரனுக்கு ‘பாதகம்’ ஏற்படும் என்றார். ஐயா உங்கள் விளக்கம் போதும் இனி வேண்டாம். ஒன்றை மட்டும் சொல்லுங்கள் மேர்வின் சில்வாவுக்கும், மரத்தில் கட்டப்பட்ட வருக்கும் எதிர்காலம் எப்படியிருக்கும்? அதைச் சொன்னால் போதும் என்றேன்.

திருவிளையாடலில் சிவாஜி கணேசன் சிரித்ததுபோல நண்பர் சிரித்தார். அதைச் சொல்வதற்கு அடுத்த பொதுத் தேர்தல் வர வேண்டும் என்றார். பொதுத் தேர்தல் வந்தால் என்ன நடக்கும்? மறுத்தான் கொடுத்தேன். கட்டியவர் கட்டுப் பணம் இழப்பார். கட்டப்பட்ட வர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார் என்றார் நண்பர். ஆ…! கடவுளே! எண்ணெய் கேட்ட நடிகர் வடிவேலுவிடம் மாட்டுப்பட்ட கடைக்காரரின் நிலையில் இப்போது நான்.

மெளனம் காத்தேன். அட! குழம்பாதீர்கள். அடுத்த தேர்தலில் மேர்வின் சில்வாவால் மரத்தில் கட்டப்பட்ட அரச பணியாளர் போட்டியிடுவார். அவருக்கு நிச்சயம் எம்.பி. பதவி கிடைக்கும். மரத்தில் கட்டிய மேர்வின் சில்வா அடுத்த தேர்தலில் உள்ளதையும் இழப்பார் என்று கூறி விட்டுத் தொலைபேசி இணைப்பைத் துண்டித் தார் நண்பர். அவ்வளவுதான் தலைவிறைப்புத் தாங்க முடியவில்லை.

வலம்புரி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல