திங்கள், 16 ஆகஸ்ட், 2010

சுதந்திரம்

உலக நாடுகளில் விடுதலைப் போர் நடத்திய எல்லாத் தலைவர்களும் கத்தி, துப்பாக்கி, பீரங்கி, கப்பல், விமானம் என்பதை நம்பிப் போராடினார்கள். குஜராத்தில் இருந்து புறப்பட்ட அந்த ஒற்றை மனிதர் மட்டும் எந்த ஆயுதமும் இல்லாமல் போர்க்களத்தில் புகுந்தார். “இந்த நாடு எங்களுடையது. உம்முடையது அல்ல…” என்ற ஒற்றை உண்மையை பிரிட்டிஷார் முன் வைத்துப் போராடினார். அந்த சத்தியத்தின் முன் எல்லா ஆயுதங்களும் கூர்மழுங்கிப் போயின. யார் அவர்? - சுதந்திரப் போராட்ட தியாகி அண்ணல் காந்தியடிகள்.

“நிராயுதபாணியில் நின்று போராடும் ஒற்றை மனிதனின் போராட்டத்தை வலிமை வாய்ந்த ஆயுதங்கள் வைத்திருக்கும் பிரிட்டிஷ் ஆட்சிக்காரர்களால் ஏன் நசுக்க முடியவில்லை?” என்று எதிர்கட்சிகள் பாய்ந்த போது சர்ச்சில் சொன்ன பதில் ஆழமானது. “அந்த மனிதன் கத்தியைய் எடுத்தால் நான் துப்பாக்கியை எடுப்பேன். துப்பாக்கியைத் தூக்கினால் நான் பீரங்கியால் நசுக்கியிருப்பேன். பீரங்கி எடுத்துப் போராடினால் நான் குண்டு மழை பொழிந்து அழித்திருப்பேன். அவர் சத்தியத்தை அல்லவா கையில் எடுத்துக் கொண்டு போராடுகிறார். சத்தியத்தை எதிர்க்கும் ஆயுதம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்பதை நண்பருக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என்றார் சர்ச்சில்.

எதிரியையும் அன்பால்இ அஹிம்சையால்இ சத்தியத்தால் பணியவைத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்தது. உலகம் தொடங்கிய நாள் முதல் இன்றுவரை உலகத்தைப் பாதித்த நூறு போர் என்ற பட்டியலில் எழுதினால் அதில் மகாத்மா காந்தியும் ஒருவர். உலக வரலாறு அவரை ஒருபோதும் ஒதுக்காது.

இதற்கு எடுத்துக்காட்டாக அவர் வாழ்வில் நடந்த மற்றுமொரு உதாரணம்இ ஒரு நாள் காந்தி தனது கிராமத்தில் பிரார்தனை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு முஸ்லீம் மனிதர் காந்தியின் தொண்டையை பிடித்தார். பிடித்த உடனேயேஇ காந்தி குலைந்துபோய் தளதளர்த்து கீழே விழுந்தார். கீழே விழுகின்ற அந்த தருணத்தில் தனது மெல்லிய குரலில் குர்ஆனில் இருந்து சில வார்த்தைகளை கூறினார். அந்த வார்த்தைகளை கேட்டவுடனேயே அந்த முஸ்லீம் மனிதர் இவ்வாறு கூறினார். “மன்னிக்கவும். தங்களை பாதுகாப்பதற்காகவே இவ்வாறு செய்தேன்”. தங்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய வேண்டும்? என்று வினவினார். அதற்கு காந்தி இவ்வாறு பதில் கூறினார்.

“ஒன்றே ஒன்றை மட்டும் எனக்காகச் செய்இ நீ என்னிடம் என்ன செய்ய முயற்சித்தாயோ அதை யரிடமும் சொல்லாதே. இல்லையென்றால்இ இதுவே இந்து - முஸ்லீம் மதக் கலவரத்திற்கு காரணமாக அமையும்”.

“என்னை மறந்துவிடு! உன்னை மன்னித்துவிடு!!”

“Forget Me and Forgive Yourself”

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல