செவ்வாய், 14 செப்டம்பர், 2010

செல்வந்த காதலனை தேடுங்கள் - பிரதமர் அறிவுரை

இளம் பெண்கள் தமக்கொரு காதலனை தேடிக் கொள்ளும் போது பணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என அறிவுரை வழங்கி இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கொனி பரபரப்பை ஏற்படுத்தியுள் ளார்.
தன்னிடம் பணம் இருப்பதால் பெண்கள் தன்னை விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோடீஸ்வர வர்த்தகரான பெர்லுஸ்கொனி, தனது மக்கள் விடுதலைக் கட்சியின் இளைஞர் அமைப்பின் வைபவமொன்றில் கலந்து கொண்டு பெண் அமைச்சர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

“நான் ஒரு இனிமையான ஆண் என்பதுடன் எனது பணப்பையும் நிரம்பி வழிவதால் எனக்காக பெண்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள்'' என அவர் தெரிவித்தார்.

இளம் பெண்கள் மற்றும் விலைமாதுகளுடனான பாலியல் தொடர்பு குறித்து விபரிக்கையில் பெர்லுஸ்கொனி, ““நான் ஒன்றும் துறவியல்ல'' என்று தெரிவித்திருந்தார்.

எனினும் பாலியலுக்காக கட்டணம் செலுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தார். ஏற்கனவே தொலைக்காட்சி பேட்டியொன்றின் போது தன்னை ஹிட்லரின் வாரிசென நகைச்சுவையாக கூறியதன் மூலம் அவர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், தனது கட்சி இளைஞர் பிரிவின் நிகழ்வில் உரையாற்றுகையில் அந்தத் தொலைக்காட்சிப் பேட்டியின் போது கூறிய விடயங்களையும் அவர் உள்வாங்கத் தவறவில்லை.

“பெண்களுக்கு நான் கூறுவதெல்லாம் செல்வந்த காதலனை தேடுங்கள் என்பதையே. இது உண்மைக்கு புறம்பான ஒன்றல்ல. பெண்கள் வயதான ஆண்களை விரும்புகிறார்கள். அவர் (ஹிட்லர்) வயதானவரே. அவர் இறந்துவிட்டார். நான் அவரது வாரிசாக உள்ளேன்'' என பெர்லுஸ்கொனி குறிப்பிட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல