புதன், 15 செப்டம்பர், 2010

நடுவானில்160 அடி உயரத்தில் தொங்கிய தளத்தில் விநோத திருமணம்

தரையிலிருந்து 160 அடி தூர உயரத்தில் பாரந்தூக்கி உபகரணம் மூலம் தொங்கவிடப்பட்ட தளத்தில் திருமணம் செய்த பிற்பாடு அங்கிருந்து குதித்து தலைகீழாக தொங்கிபடி அன்பை வெளிப்படுத்தி பெல்ஜிய ஜோடியொன்று புதுமை படைத்துள்ளது.

இவ்வாறு பாரந்தூக்கி உபகரணத்தில் தொங்கவிடப்பட்ட தளத்தில் ஜோடியொன்று திருமண பந்தத்தில் இணைவது உலகில் இதுவே முதல் தடவையாகும்.

புருஸல்ஸ் நகரைச் சேர்ந்த ஜோடியான ஜெரோயன் சண்ட்ரா கிப்பர்ஸ்ஸின் இந்த திருமணத்தில் 20 க்கு மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

பாரந்தூக்கியில் தொங்கவிடப்பட்ட இரண்டாவது தளத்தில் அமர்ந்தபடி இசைக் கலைஞர்கள் இன்னிசை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நடுவான திருமண வைபவத்திற்கு மட்டும் 25,000 ஸ்ரேலிங் பவுண் செலவிடப்பட்டுள்ளது.

மேற்படி திருமண நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்கொண்ட நிறுவனத்தின் ஸ்தாபகரான ஸ்டீபன் கொ கோப்ஸ் விபரிக்கையில், ““திருமணம் என்பது ஒருவரது வாழ்வில் பாரிய பாய்ச்சலாகும். இனிவரும் காலங்களில் என்ன நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாது. அதை சரியாக வெளிப்படுத்துவதாக இந்த திருமண வைபவம் உள்ளது'' என்று கூறினார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல