சனி, 25 செப்டம்பர், 2010

'நாய்க்கு தீட்டு' - தீண்டாமை குற்றச்சாட்டு

தலித் கொடுத்த உணவை உண்டதால் "நாயும் தீண்டத் தகாதது ஆகியது"

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில கிராமம் ஒன்றில் உயர் சாதிக்காரர் வளர்த்த ஒரு நாய்க்கு தலித் பெண்ணொருவர் உணவளித்ததற்காக அப்பெண் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் ஒரு சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை செய்துவருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டம் மாலிக்பூர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தன் வீட்டுக்காரருக்கு கொடுத்தது போக எஞ்சிய ரொட்டித் துண்டுகளை அருகே நின்ற நாய்க்கு தான் கொடுத்ததாக சுனிதா ஜாதவ் என்ற தலித் பெண் கூறினார்.

தான் நாய்க்கு உணவு கொடுத்ததைக் கண்டு ஆத்திரம் அடைந்த அந்நாயின் உரிமையாளர் அம்ருத்லால் கிராரி ஆத்திரம் அடைந்து, நீ சாப்பாடு போட்டதால் இப்போது அந்த நாயும் தீண்டத்தகாத ஜென்மமாகிவிட்டது என்று கத்தியதாக அப்பெண் குற்றம்சாட்டுகிறார்.

நாயை தன் வீட்டின் வெளியிலேயே கட்டிப் போட்டுவிட்டு அம்ருத்லால் சென்றுவிட்டதாக அப்பெண் தெரிவிக்கிறார்.

பின்னர் கிராம பஞ்சாயத்து கூடி அந்த நாய்க்கு தீட்டுப் பட்டுவிட்டது என்று கூறியதாகவும் அதற்காக நாயின் உரிமையாளர் கிராரிக்கு தான் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் சுனிதா ஜாதவ் குற்றம்சாட்டுகிறார்.

இந்தப் பெண் மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் தெரிவித்ததை அடுத்து பொலிசார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

சுனிதா கொடுத்த ரொட்டியை உண்ட நாயின் உடம்பு கெட்டுப்போனதால், உடல் நலத்தை தேற்றி அனுப்பச்சொல்லி கேட்டுக்கொண்டு அந்த நாயை சுனிதாவிடமே விட்டுவிட்டு வந்ததாக அம்ருத்லால் கிராரி தரப்பில் கூறப்படுகிறது.

தீண்டாமை என்பது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றச்செயல் என்றாலும், அது தலித் மக்களுக்கு எதிராக அந்நாட்டில் பரவலாக பின்பற்றபட்டு வரவே செய்வதாகத் செய்கிறது.

BBC

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல