சனி, 25 செப்டம்பர், 2010

சொரியாசிஸ் என்றால் என்ன?

சொரியாசிஸ் என்பது ஒரு சாதாரணமான தோல் அழற்சி நிலையாகும். மக்கள் தொகையில் பெரும்பாலான மக்கள் இதனால் தாக்கப்படுகிறார்கள். தோலில் உள்ள உயிரணுக்கள் வேகமாகப் பிரிவதன் மூலம் இது உண்டாகும்.

இதன் விளைவாக தோல் மந்தமாகிவிடும், புரையோடும்.

தோலிலுள்ள அதிகரிக்கப்பட்ட பல சிறு இரத்த நாளங்கள் வீங்கிவிடுவதால் தோல் சிவப்பு நிறமாகக் காணப்படும்.

சொரியாசிஸ் எவ்வாறு காணப்படும்?

சொரியாசிஸ் என்பது தோலில், பொடிந்து விழும் புரையுடன் கூடிய சிவப்பு திட்டுக்கழாகக் காணப்படும்.

உடலின் எந்தப்பாகமும் தாக்கப்படலாம்.

முழங்கை, முழங்கால் மூட்டு, முதுகு, தலையுச்சி முதலிய பாகங்கள் சாதாரணமாகப் பாதிக்கப்படும்.

சொரியாசிஸ் தொற்றும் தன்மையுடையதா?

சொரியாசிஸ் தொற்று நோயல்ல.இது மற்றவர்களுக்குப் பரவாது. குறைந்த சுகாதாரத்தின் காரணமாக இது ஏற்படாது.

சொரியாசிஸை எது ஏற்படுத்தும்?

சொரியாசிஸ் மரபு காரணம் மற்றும் சுற்றுச் சூழல்நிலை இவற்றின் இணைப்பினால் ஏற் படுகிறது என்று நம்பப்படுகிறது.

சொரியாசிஸால் பாதிக்கப்படுபவர்களில் 1/4 1/3 பங்கினர் அதே நோயுடைய குடும் பத்திலிருந்து வந்தவர்களே! சிலர் விசயங்களில் மரபு நிலை பங்காற்றுகிறது.

உடல், மன அழுத்தங்கள், குரல்வளை தொற்று, காய்ச்சல், ஹோர்மோன் பிரச்சினை சில ஆண்ட்டிபயடிக் போன்ற சில மருந்துகள், சொரியாஸிஸை மேலும் மோசமாக்கும்.

குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் சொரியாசிஸை மோசமாக்கி, குணப்படுத்த கடினமாக்கும்.

சொரியாசிஸ் பிறசூழ்நிலைகளுடன் தொடர்புடையதா?

ஏறத்தாழ 5சதவீத சொரியாசிஸ் நோயாளிகளுக்கு மூட்டுவலிகளும், வீக்கமும் ஏற்படும்.

சொரியாசிஸ் விரல்களையும், கால்விரல் நகங்களையும் தாக்கி, சிறு குழிகளையும், வண்ணமாற்றத்தையும், நகங்கள் தடிப்படை வதையும் ஏற்படுத்தும்.

சொரியாசிஸ் யாருக்கு வரும்?

சொரியாசிஸ் ஆண், பெண் இருவரையும் சமமாகத் தாக்கும்.
சொரியாசிஸ் வழக்கமாக 20ஆவது வயதில் தாக்கத் தொடங்கும். பிறப்பிலிருந்தும் திய வயதிலும் கூட இது வரலாம்.

ஒரு முறை சொரியாசிஸ் வந்ததும், குறைதல், தணிதல், அதிகரித்தல் என பல்வேறு கால மாற்றங்கள் ஏற்படும்.

சொரியாசிஸூக்கு என்ன மருத்துவங்கள் கிடைக்கின்றன ?

சொரியாசிஸ் நோயாளிகள் செய்யக்கூடா தவை, செய்ய வேண்டியவை;

தோலைச் சொறியாதீர்கள் ஏனெனில் இது குணமாவதைத் தாமதப்படுத்தும்.

மருந்துகள் வேலை செய்து விளைவுகள் காட்ட பல வாரங்கள் ஆகுமாதலால் மருத்து வத்தை விரைவில், இடையில் நிறுத்திவிடாதீர்கள்.

சொரியாசிஸைக் குணப்படுத்த எழுதித்தரப்பட்ட மருந்து வில்லைகளையும், மருந்துவத்தையும் திடீரென்று நிறுத்திவிடாதீர்கள். இதனால் நோய் இன்னும் மோசமாகும்.

மருத்துவத்தைத் தொடர்ந்து சீராக எடுத்துக் கொள்ளுங்கள்.

தோலை எப்போதும் ஈரத்தன்மையுடையதாக வைத்திருங்கள். அது நமைச்சலையும், புரையேற்படுவதையும் தடுக்கும்.

சூரிய ஒளியில் இருப்பது பொதுவாக நல்லதே, ஆனால் அதிகமாக வெகு நேரம் இருப்பதால் வேர்க்குருக்கள் உண்டாகும்.

அதனால் சொரியாசிஸ் தீவிரமடையும்.

மன அழுத்தம் சொரியாசிஸைத் தீவிரப்படுத்தும். அமைதியாகவிருக்கவும், உடற் பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக்கொள்ளவும், விடுப்பு எடுத்துக்கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும்.
Image Hosted by ImageShack.us

1 கருத்து:

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல