புதன், 22 செப்டம்பர், 2010

பில்கேட்ஸின் முடிவு

உலகின் மிகப் பெரிய செல்வந்தர்களில் ஒருவரான பில்கேட்ஸ், தனது செல்வத்தை தனது பிள்ளைகளுக்கு விட்டுச் செல்லப் போவதில்லை என தெரிவித்தார்.

கணினி மென்பொருள்துறையில் சாதனை படைத்து வரும் மைக்ரோ சொப்ட் நிறுவனத்தின் உடைமையாளரான பில்கேட்ஸின் (54 வயது) சொத்து 34 பில்லியன் ஸ்ரேலிங் பவுண் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அவருக்கும் அவரது மனைவி மெலின்டாவுக்கும் (44 வயது) ஜெனிபர் (14 வயது), ரோறி (11 வயது), போப் (8 வயது) ஆகிய 3 பிள்ளைகள் உள்ளனர். ““எனது செல்வத்தை என் பிள்ளைகளிடம் ஒப்படைப்பது சிறந்த யோசனையென நான் கருதவில்லை. அது எனது பிள்ளைகளுக்கோ அன்றி சமூகத்திற்கோ நல்லது அல்ல. நம்ப முடியாத நல்ல விளைவை ஏற்படுத்தக் கூடிய ஒன்றையே நான் செய்ய விரும்புகிறேன்'' என பில் கேட்ஸ் தெவித்தார்.

பில்கேட்ஸும் அவரது மனைவியும் தம்மால் ஸ்தாபிக்கப்பட்ட தொண்டு ஸ்தாபனத்தின் மூலம் ஏழை நாடுகளைச் சேர்ந்த 250 மில்லியனுக்கும் அதிகமான சிறுவர்களுக்கு நோய்த் தடுப்பு மருந்துகளை வழங்குவதற்காக 18 பில்லியன் ஸ்ரேலிங் பவுணுக்கும் அதிகமான பணத்தை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல