புதன், 22 செப்டம்பர், 2010

டுபாயில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையர்

டுபாயில் தனது காதலியின் கணவரை கத்தியால் குத்திக் கொன்ற 23 வயதான இலங்கையர் ஒருவர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

ரோவன் குமார் எனும் இந்த இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் டுபாய் குற்றவியல் நீதி மன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டு முதலில் ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.

இது திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட கொலை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின் கடந்த ஜுன் மாதம் டுபாய் மேன்முறையீட்டு நீதிமன்றம் மேற்படி இளைஞருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சரிடம் கேட்டபோது இவ்விடயம் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என பதிலளிக்கப்பட்டது. இலங்கை வர்த்தகரும் ரோவன் குமாருடன் பணியாற்றியவருமான ஜே.பி. என்பவர் 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் குத்திக் கொல்லப்பட்டார். தனது கணவரை ஆபிரிக்கர் ஒருவர் கொன்றதாக அவரின் மனைவி பொலிஸாரிடம் முதலில் கூறினார். ஆனால் அப்பெண்ணுக்கும் குமாருக்கும் தொடர்பிருப்பதை சாட்சிகள் வெளிப்படுத்தின.

அதன் பின்னர் அதை ஒப்புக் கொண்ட மேற்படி பெண் குமாரே தனது கணவரை கொன்றதாக தெரிவித்தார். குமார் தான் கொலை செய்யவில்லை எனவும் ஆனால் ஜே.பி.யுடன் சண்டையிட்டதாகவும் கூறினார். குமார் குற்றவாளியாக காணப்பட்டபோதிலும் அவ்வேளையில் அது திட்டமிடப்பட்ட கொலை என உறுதி ப்படுத்த முடியாததால் ஆயுள் தண்டனை மாத்திரம் வழங்கப்பட்டது.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்ற விசாரணையின்போது குறுகலான ஒழுங் கையொன்றில் குமார் கத்தியுடன் காத்திருந்து ஜே.பி. மனைவியுடன் கைகோர்த்த வாறு நடந்து வருவதைக் கண்டவுடன் அவரை குத்திக் கொன்றதை வழக்குத் தொடுநர்கள் நிரூபித்தனர்.

சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய குமாரை அவரின் தாயாரின் வீட்டிலிருந்து பொலிஸார் கைது செய்தமை குறிப்பிடத்தக்கது. குமாருக்கு மத்திய சிறைச்சாலை யில் மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இத் தண்டனையை நிறைவேற்றுவ தற்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

டுபாயில் இறுதியாக 2002ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல