சனி, 9 அக்டோபர், 2010

அக்டோபர் 10-ந் தேதி திருமணம் செய்ய இளம் ஜோடிகள் ஆர்வம்

நாளைய தேதி, 10.10.2010 என அமைவதால் இந்த ஆண்டின் மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. இதனால், நாளை திருமணம் செய்வதற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் ஜோடிகள் பெரிதும் ஆர்வமாக உள்ளனர். இதற்காக, அங்குள்ள தேவாலயங்கள் மற்றும் திருமண மண்டபங்களில் பல மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துள்ளனர். அதிலும், நாளை காலை 10 மணி 10 நிமிடத்துக்கு திருமணம் செய்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

இளம் ஜோடிகளின் இத்தகைய ஆர்வத்தால், திருமண நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்பவர்களுக்கு `ஜாக்பாட்' அடித்துள்ளது. நாளைக்கு ஒரு நாள் மட்டும் குறைந்தது 6 திருமண நிகழ்ச்சிகளையாவது ஒவ்வொருவரும் கைவசம் வைத்திருக்கின்றனர். இதற்கிடையே, 10.10.2010 தேதியில் காலை 10.10 மணிக்கு திருமணம் முடிப்பது மிகுந்த அதிர்ஷ்டம் என `பெங் சூயி' ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்துள்ளதால் சீனர்களும் நாளைக்கு திருமணம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல