சனி, 9 அக்டோபர், 2010

திப்பு சுல்தான் அரியணை தங்க அலங்காரம் ஏலம்

இந்தியாவில் 17-ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மைசூர் மகாராஜா திப்பு சுல்தானை, ஆங்கிலேயே கிழக்கிந்திய படையினர் 1799-ம் ஆண்டு ஸ்ரீரெங்கபட்டினம் போரில் கொன்றனர். பின்னர், திப்பு சுல்தானின் அரியணை சூறையாடப்பட்டது. அதில் அலங்கார வேலைப்பாடுகளுடன் இருந்த தங்கத்தினால் செய்யப்பட்ட சிங்கம் உள்ளிட்டவை மூன்றாக சிதைக்கப்பட்டன. அதில் ஒரு பகுதி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரூ.2 கோடியே 34 லட்சத்துக்கு லண்டனில் ஏலம் விடப்பட்டது.

இந்த நிலையில், இரண்டாவது பகுதியை லண்டனைச் சேர்ந்த போன்ஹாம்ஸ் நிறுவனம் ஏலம் விட்டது. கடந்த 18 மாதங்களாக அந்த ஏல நிறுவனத்திடம் இருந்த தங்க சிங்கத்தின் தலையை ரூ.2 கோடியே 62 லட்சத்துக்கு கனடாவை சேர்ந்த ஒருவர் ஏலத்தில் எடுத்தார். திப்பு அரியணையை அலங்கரித்த சிங்கத்தின் பாகங்கள் அனைத்தும் ராபர்ட் கிளைவின் மனைவி வழி மரபினரிடமே கடந்த 200 ஆண்டுகளாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, மூன்றாவது பகுதி கூட அந்த ஸ்காட்லாந்து குடும்பத்தினரிடமே இருக்கிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல