மூன்று வயதாகும் குழந்தை அளன்னா மேர்லேடோ எதையும் விளையாட்டுத் தனமாக மலசலகூடத்துக்குள் தூக்கிப் போடும் பழக்கடையவர். இதேவேளை திடீரென இவர்கள் வீட்டில் வளர்த்து வந்த பூனையின் புதிய குட்டியை காணாமல் சிறுமியின் தாய் தேடியுள்ளார்.
சந்தேகத்துடன் சிறுமியிடம் எங்கே எனக் கேட்ட போது பயந்த சிறுமி மலசலகூடத்துக்குள் போட்டு விட்ட உண்மையைக் கூறியுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த குடும்பத்தினர் தீயணைப்புத் துறை உதவியை நாடியுள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் மலசலகூடத்தின் குழாய்களின் வழியே 80 அடி நீளத்திற்கு கமரா பொருத்தப்பட்ட சாதனம் ஒன்றை இறக்கிய பின் பூனைக்குட்டி உயிருக்குப் போராடி கத்திக் கொண்டிருப்பதை சிறிய திரையின் உதவியுடன் பார்த்துள்ளனர்.
பூனைக்குட்டி மாட்டிக் கொண்ட இடம் வரையிலும் உள்ள குழாய்களை உடைத் தெடுத்து பூனைக்குட்டியை காப்பாற்றிக் கொடுத்துள்ளனர். காப்பாற்றப்பட்ட பூனைக் குட்டி தாயுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக