லைடி பெயிலார்ட் (60 வயது) என்ற மேற்படி பெண் இறந்துவிட்டதாக மருத்துவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட போதும், அவருடைய மகன்மார் மூவரும் தமது புற்றுநோயாளியான தாயாருக்கு இணைக்கப்பட்டிருந்த உயிர்காப்பு வசதிகளை அகற்ற மறுத்துள்ளனர்.
தனியாருக்கு சொந்தமான மருத்துவமனையில் இறந்து விட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட தமது தாயாரை மேற்படி மகன்மார் தென்மேற்கு பிரான்ஸ் நக ரிலுள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றினர்.
அங்கு அவரைப் பசோதித்த மருத்துவர்கள், அவரது மூளை உயிர்ப்புடன் இருப்பதை கண்டறிந்து சிகிச்சையளித்தனர்.
இந்நிலையில் இறந்துவிட்டதாக பிரகடனப்படுத்தப் பட்டு 14 மணி நேரம் கழித்து லைடி பெயிலார்ட் கண் விழித்தெழுந்துள்ளார்.
இது தொடர்பில் லைடி பெயிலார்ட் விபரிக்கையில், ““வாந்தியை நிறுத்த எனக்கு ஏற்றப்பட்ட ஊசி மருந்தொன்றையடுத்து எனக்கு மயக்கம் ஏற்பட்டது மட் டும் தான் ஞாபகத்தில் உள்ளது'' என்று கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக