வாகனம் செல்லும் பாதைக்கு முட்டுக் கட்டையாக கார் ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதாக வியாழக்கிழமை கிடைத்த முறைப் பாட்டையடுத்து குறிப்பிட்ட கார் சோதனையிடப்பட்டது.
இந்நிலையில் காரின் பயணிகள் ஆசனத்தில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் பகுதியாக பதப்படுத்தப்பட்ட சடலம் இருப்பதைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் காரின் உமையாளரான பெண் பொலிஸாருக்கு விபரிக்கையில், வீடுவாசலற்ற குறிப்பிட்ட பெண் தனது காரில் படுத்துறங்கிய வேளையில் உயிழந்ததாகவும் பொலிஸாரை தொடர்பு கொள்வதற்கு தனக்கிருந்த அச்சம் காரணமாக இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மேற்படி பெண்ணின் சடலம் 3 மாதங்கள் தொடக்கம் 10 மாதங்கள் வரை காரில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறிப்பிட்ட பெண்ணின் சடலத்தில் படுகொலை செய்யப்பட்டதற்கான எதுவித அடையாளமும் காணப்படவில்லை எனவும் அப்பெண்ணின் மரணத்தை இயற்கை மரணம் என்றே கருதுவதாகவும் பிராந்திய பொலிஸ் உத்தியோகத்தரான எட் எவெரெட் தெரிவித்தார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக