முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரின் மனைவி செர்ரியின் ஒன்றுவிட்ட சகோதரி லாரன் பூத் (வயது 43). இவர் ஈரான் நாட்டு செய்தி நிறுவனமான, "பிரஸ் டிவி'யில் பணியாற்றி வருகிறார். மனித உரிமைக்காகவும் போராடக் கூடியவர். பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்தவரான லாரன் பூத், தற்போது முஸ்லிம் மதத்துக்கு மாறி உள்ளார். கடந்த ஆறு வாரங்களுக்கு முன், ஈரான் நாட்டில் புனித நகரமாகக் கருதப்படும், "குவாம்' நகருக்குச் சென் று திரும்பிய பிறகு இம்மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார். குரான் படிக்கிறார். மது அருந்துவதை கைவிட்டு விட்டார். மசூதிக்கு சென்று வருகிறார். வெளியில் செல்லும்போது, தலையையும், கழுத்தையும் மறைக்கும் வகையில் உடை அணிந்து செல்கிறார்.
வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும் என பதிலளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக