திங்கள், 8 நவம்பர், 2010

குதி உயர்ந்த பாதணிகளால் 5 மில்லியன் பெண்கள் காயம்

தமது குதி உயர்ந்த பாதணிகள் காரணமாக 3 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற நேர்ந்துள்ளதாக புதிய ஆய் வொன்று கூறுகிறது.

மேற்படி ஆய்வில் பங்கேற்ற பெண்களில் அரைப்பங்கினர் கால் தசை நார் கிழிந்ததாலும் கணுக்கால் திரும்பியதாலும் ஏனையவர்கள் குதி உயர்ந்த பாதணிகளை அணிந்து நடக்கையில் கால் தடுமாறி நிலத்தில் விழுந்து பற்கள் மற்றும் மணிக் கட்டுகளில் உடைவு ஏற்பட்டதாலும் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற நேர்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இறுக்கமான குதி உயர்ந்த பாதணியால் ஏற்பட்ட கடும் வலியால் இந்தப் பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மருத்துவ உதவி பெற நேர்ந்ததாகத் தெரிவித்தனர்.

61 சதவீதமானவர்கள் மாலை முழுவதும் நடக்க முடியாது அமர்ந்திருக்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

80 சதவீதமான பெண்கள் தமக்கு பொருத்தமற்றது என தெரிந்தும் குதி உயர்ந்த பாதணிகளை வாங்கியுள்ளனர்.

தமது தோற்றத்தை மெருகூட்டுவதற்காக குதி உயர்ந்த பாதணிகளை வாங்கும் பெண்கள், பின்னர் தீராத வலியால் அவதிப்பட்டு வருவதாக மேற்படி ஆய் வில் பங்கேற்ற ஆய்வாளர் லிஸா மக்கார்டன் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல