வியாழன், 25 நவம்பர், 2010

பிரபல நகைச்சுவை நடிகர் விபத்தில் சிக்கினார்

பி‌ரபல நகை‌ச்‌சுவை‌ நடி‌கர்‌ எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌. இவர்‌ ‘மதரா‌சபட்‌டி‌னம்’‌ வி‌ஜய்‌ இயக்‌கத்‌தி‌ல்‌ வி‌க்‌ரம்‌ கதா‌நா‌யகனா‌க நடி‌த்‌து வரும்‌ ஒரு படத்‌தி‌ல்‌ நகை‌ச்‌சுவை‌ வே‌டத்‌தி‌ல்‌ நடி‌த்‌து வருகி‌றா‌ர்‌. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌ தற்‌போ‌து ஊட்‌டி‌யி‌ல்‌ நடந்‌து வருகி‌றது. நே‌ற்‌று இரவு‌ இந்‌தப்‌ படத்‌தி‌ல்‌ நடி‌த்‌து முடி‌த்‌துவி‌ட்‌டு, இரவு‌ பத்‌து மணி‌க்‌கு பொ‌ள்‌ளா‌ச்‌சியி‌ல்‌ நடை‌பெ‌ற்‌று வரும்‌ ஜெ‌யம்‌ ரா‌ஜா‌ இயக்கத்தில் விஜய்யி‌ன்‌ “வே‌லா‌யு‌தம்”‌ படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பு‌க்‌கு செ‌ல்‌ல கா‌ரி‌ல்‌ பு‌றப்‌பட்‌டா‌ர்‌. அவருடன்‌, கனா‌ ‌கா‌னும்‌ கா‌லங்‌கள்‌ பா‌ண்‌டி‌, மற்‌றும்‌ எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கரி‌ன்‌ உதவி‌யா‌ளர்‌ இருநதனர்‌.

நள்‌ளி‌ரவு‌ பொ‌ள்‌ளா‌ச்‌சி‌க்‌கு இருபது கி‌லோ‌ மீ‌ட்‌டருக்‌கு முன்‌பு‌ உள்‌ள முல்‌லுபா‌டி‌ கே‌ட்‌ என்‌கி‌ற கி‌ரா‌மம்‌ அருகே‌ செ‌ல்‌லும்‌ போ‌து எதி‌ரே‌ வந்‌த கா‌ருடன்‌ ஒரு ஆட்‌டோ‌ மோ‌தி‌, அது இவர்‌கள்‌ வந்த கா‌ரி‌ல்‌ டமா‌ல்‌ என மோ‌தி‌யது. இதனா‌ல்‌ வி‌பத்‌து ஏற்‌பட்‌டு இருபக்‌கமும்‌ கா‌ர்‌கள்‌ உருண்‌டன. அருகி‌ல்‌ இருந்‌த கி‌ரா‌ம மக்‌கள்‌ ஓடி‌வந்‌து கா‌ரி‌ல்‌ சி‌க்‌கி‌க்‌ கொ‌ண்‌டவர்‌களை‌ வி‌டுவி‌த்‌தனர்‌. யா‌ருக்‌கும்‌ பெ‌ரி‌ய கா‌யம்‌ இல்‌லா‌மல்‌ அதி‌ர்‌ஷ்‌டவசமா‌க உயி‌ர்‌ தப்‌பி‌னர்‌. இந்‌த வி‌பத்‌து குறி‌த்‌து‌ போ‌லீ‌சுக்‌கு தகவல்‌ தெ‌ரி‌விக்‌கப்‌பட்‌டது‌. தகவல்‌ அறி‌ந்‌ததும்‌ இயக்‌குநர்‌ ஜெ‌யம்‌ ரா‌ஜா‌, எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கருக்‌கு வே‌று கா‌ர்‌ அனுப்‌பி‌, அழை‌த்‌து வர ஏற்‌பா‌டு செ‌ய்‌தி‌ருக்‌கி‌றா‌ர்‌.

இன்‌று மதி‌யம்‌ வி‌ஜய்‌ நடி‌க்‌கும்‌ “வே‌லா‌யு‌தம்” படத்‌தி‌ன்‌ படப்‌பி‌டி‌ப்‌பி‌ல்‌ கலந்‌துகொ‌ண்‌டு நடி‌க்‌கப்‌ போ‌வதா‌க எம்‌.எஸ்‌.பா‌ஸ்‌கர்‌ தெ‌ரி‌வி‌த்‌தா‌ர்‌.

வி‌பத்‌து பற்‌றி‌ அவர் கூறியதாவது :
“அதை‌ நி‌னை‌த்‌தா‌லே‌ பகீ‌ர்‌ என்‌று இருக்‌கி‌றது. இறை‌வன்‌ அருளா‌ல்‌ அனை‌வரும்‌ உயி‌ர்‌ தப்‌பி‌னோ‌ம்‌. இதுலே‌ர்‌ந்‌து நா‌ம பா‌டம்‌ கத்‌துக்‌கனும்‌. வா‌ழ்‌க்‌கை‌யி‌ல்‌ ஒவ்‌வொ‌ரு நொ‌டி‌யு‌ம்‌ நமக்‌கு ரொ‌ம்‌ப முக்‌கி‌ய‌ம்‌. அதனா‌ல வே‌லை‌யி‌ல்‌ கண்‌ணும்‌ கருத்‌துமா‌க இருக்‌க வே‌ண்‌டும்‌. கொ‌ஞ்‌சம்‌ கண்‌ அசந்‌தா‌ல்‌ இப்‌படி‌த்‌தா‌ன்‌ நடக்‌கும்‌ என்‌று எத்‌தனை‌யோ‌ வி‌பத்‌துகள்‌ நமக்‌கு பா‌டம்‌ கத்‌து தந்‌தி‌ருக்‌கு. அதனா‌ல டி‌ரை‌வர்‌கள்‌தா‌ன்‌ யோ‌சி‌க்‌கனும்‌. அவர்‌களும்‌, அவு‌ங்‌க குடும்‌பமும்‌, நல்‌லா‌ இருக்‌கனும்‌. நம்‌மளும்‌ நல்‌லா‌ இருக்‌கனும்‌… ” என்‌றா‌ர்‌.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல