வியாழன், 25 நவம்பர், 2010

கிருஷ்ணா தலைமையிலான குழுவினர் நேற்று இலங்கை வந்தடைந்தனர்

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் வெளிவிவகார செயலாளர் நிருபமாராவும் நேற்று கொழும்பை வந்தடைந்தனர். இந்திய-இலங்கை கூட்டு ஆணைக்குழுக் கூட்டத்துக்கு இணைத் தலைவராக தலைமை தாங்கவுள்ள கிருஷ்ணா இவ்விரு நாடுகளுக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு உடன் படிக்கைகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யவுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்று மாலை 4.40 மணியளவில் இலங்கையை வந்தடைந்தார். இந்தியாவின் விசேட வானூர்தி ஒன்றின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.இந் திய வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ் உட்பட்ட இருபது பேர் கிருஷ்ணா வுடன் வந்துள்ளார்கள். விமான நிலையத்திற்கு நேரில் சென்று எஸ்.எம்.கிருஷ்ணாவை இலங்கை வெளி நாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வர வேற்றார்.

இலங்கையின் வெளிநாட்டமைச்சரை உத் தியோகபூர்வமாக கிருஷ்ணா இன்று சந்திக்கிறார்.பின் இரு அமைச்சர்களும் மாலை கூட்டாக ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளனர். கிருஷ்ணா நாளை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து இந்தியத் துணைத் தூதரகம் மற்றும் வீட்டுத் திட்டங்களை ஆரம்பித்து வைப்பார்.

இதேவேளை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் வருடாந்தம் பாதுகாப்பு தொடர் பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற் கான தன்மைகள் குறித்தும் இந்திய வெளி விவகார அமைச்சர் கிருஷ்ணாவின் விஜயத் தின்போது ஆராயப்படவுள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.

அதேவேளை வட பகுதியில் போரின்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதென ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் விஜயத்தின் போது இந்தியா உறுதியளித்திருந்தது.இதன் ஒரு அங்கமாக விரைவில் ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தை அங்கு ரார்பணம் செய்யும் நிகழ்விலும் இந்திய வெளி விவகார அமைச்சர் கிருஷ்ணா கலந்து கொள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணத்திலும் அம்பாந்தோட்டை யிலும் தனது தூதரங்களை இந்தியா திறந்து வைப்பது இலங்கையில் தனது பிரசன்னத் தை இந்தியா விரிவுபடுத்துகிறது என்பதை வெளிப்படுத்துவதாக இந்திய ஆங்கிலப் பத் திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. அதாவது சீனாவுக்கு இரண்டாவது இடத் தில் இந்தியா இருக்கப்போவதில்லை என விடுக்கப்படும் செய்தியாக இது காணப்படு கிறது என அப்பத்திரிகை குறிப்பிடுகிறது. இலங்கையில் பாரிய இரு உள்சார் கட்ட மைப்பு திட்டங்களாக அம்பாந்தோட்டை மற் றும் கொழும்புத் துறைமுக அபிவிருத்தித் திட் டங்கள் உள்ளன.

இந்தியாவின் கோடிப்புறத்தில் சீனா நேரடி சவாலாக காணப்படுவதாக நோக்கப்படும் நிலையில், இலங்கையில் தனது செயற்பாட் டை மீள ஏற்படுத்திக்கொள்வதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. இதில் பாதுகாப்பு உடன்படிக்கை தொடர் பான பேச்சை மீள ஆரம்பித்தல் மிகவும் முக் கியமானதென்ற நிலைப்பாட்டை புதுடில்லி கொண்டுள்ளது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல