திங்கள், 20 டிசம்பர், 2010

நவாலியில் நடந்தது என்ன?

நவாலியில் உள்ள வயல்வெளி ஒன்றில் தண்ணீர் மேல் நோக்கி எழுந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.

உண்மை அதுவல்ல வளிமண்டலத்தில் ஏற்படும் அமுக்கம் காரணமாக கருமுகிலுக்கு தண்ணீருக்கும் தொடர்பு ஏற்பட்டு அந்தப்பகுதியில் சுழற்சி ஏற்படுகிறது அதை Water spout என அழைக்கிறார்கள்.

அது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். ஆனால் தண்ணீரை ஒருபோதும் மேலே உறிஞ்சாது. அந்தப்பகுதியில் உள்ள நிரில் சுழற்சியை ஏற்படுத்தும். ஆழமான நீர்ப்பகுதியாக இருந்தால் சுழி போன்று காணப்படும். கப்பலைக்கூட சுழற்றும் சக்தி கொண்டது இந்த நீர்த்தம்பம். அது பலநாடுகளில் பல தடவை நிகழ்ந்துள்ளது. பல வருடங்களிற்கு முன்னர் குருநகருக்கு அருகில் யாழ் கடல்நீரேரியில் இப்படி நீர்த்தம்பம் ஏற்பட்டது. அது சம்பந்தமான வீடியோக்களும் படங்களும் நீங்கள் இங்கே காணலாம்.

சிங்கப்பூர் கடலில் இந்த நீர்த்தம்பம் ஏற்பட்டபோது அதற்குள் அகப்பட்ட கப்பல் சுழலுவதை நீங்கள் இங்கே காணலாம்.

சிங்கப்பூர்




கனடாவில் சென்ற் லோறன்ஸ் நதியில் மொன்றியால் துறைமுகத்திற்கு அருகில் இந்த நீர்த்தம்பம் ஏற்பட்டபோது.


மொன்றியால் கனடா


நவாலியில்
கீழே வரிசையில் அமெரிக்காவின் ரெக்ஸாசில், ஹொலன்ட் நாட்டில், பஹாமாஸ் தீவில். கனடாவில் ஹியூரன் ஏரியில் மற்றும் நவாலியில் நடந்த நீர்த்தம்பங்களின் படங்கள்.


 
 

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல