திங்கள், 20 டிசம்பர், 2010

லேரி கிங் நிகழ்ச்சி முடிவுற்றது

சிஎன்என் டிவி சேனலில் 25 ஆண்டுகளாக தொகுப்பாளர் லேரி கிங் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.

வாஷிங்டனில் 25 ஆண்டுகளுக்கு முன் ‘லேரி கிங் லைவ்’ என்ற பெயரில் பிரபலங்கள் பங்கேற்று கலந்துரையாடும் நிகழ்ச்சியை லேரி கிங் நடத்தினார். சிஎன்என் டிவியில் அது தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. இப்போது 77 வயதாகும் லேரி கிங், அமெரிக்க அதிபர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என கேள்விக் கணைகளால் துளைக்காத பிரபலங்களே இல்லை எனலாம். அவரது நிகழ்ச்சிக்கு கடந்த 25 ஆண்டுகளாக வரவேற்பு நீடித்தது.

எனினும், இப்போதைய மீடியா போட்டி அதிகரிப்பால், லேரி கிங் லைவ் நிகழ்ச்சியின் தரவரிசை சமீப வாரங்களில் சரிந்தது. அதனால், பிரைம் டைம் எனப்படும் இரவு 9 மணியில் இருந்து வேறு நேரத்துக்கு நிகழ்ச்சியை சிஎன்என் மாற்றப் போவதாக அறிவித்தது. நேற்று முன்தினம் இரவு 9.59க்கு நிகழ்ச்சியை முடித்துக் கொள்வதாக நா தழுதழுக்க லேரி கிங் அறிவித்தபோது, அரங்கின் விளக்குகள் அணைக்கப்பட்டன. ஆனாலும், லேரி கிங்கிங் 25 ஆண்டு கால சாதனை பிரகாசித்தது
.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல