சனி, 11 டிசம்பர், 2010

சங்கானையில் நேற்றிரவு பயங்கரம் பூசகர்கள் மூவர் படுகாயம் ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு

சங்கானை முருகமூர்த்தி ஆலயத்திற்கு முன்பாக வைத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பூசகர்கள் மீது நேற்றிரவு 8.30 மணி யளவில் ஆயுததாரிகள் துப்பாக்கிப் பிரயோ கம் செய்துள்ளனர். இதில் படுகாயமடைந்த மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையில் வைத்து அவர்களது நண்பர்களால் தெரிவிக்கப்பட்டதாவது, நேற்றிரவு 8.30 மணியளவில் சங்கானை முருகமூர்த்தி ஆலயத்திலிருந்து பூசகர் ஒருவர் வெளியேவந்துள்ளார். அப்போது அங்கு நின்ற ஆயுததாரிகள் பூசகர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தினையடுத்து அருகிலிருந்த வீட்டிலிருந்த தந் தையார் ஓடிச்சென்ற போது அவரின் மீதும் பின்னர் சென்ற அவரின் மகன் மீதுமாகத் துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.இச்சம்பவத்தில் நித்தியானந்த சர்மா (வயது 56) அவரது மகன்களான சிவானந்த சர்மா (வயது 32), ஜெகானந்த சர்மா (வயது 26) ஆகிய மூவருமே காயமடைந்தவர்களாவர். இவர்கள் உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை நேற்றுக் காலை வவுனியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பெறுமதியான மோட்டார் சைக்கிளையும் துப்பாக்கிதாரர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.அவர்கள் கொண்டு வந்த இரண்டு சைக்கிள்களும் அவ் விடத்திலேயே காணப்படுகின்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை இச்சம்பவத்தையடுத்து யாழ். குடாநாடு முழுவதும் இராணு வத்தினர் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் சங்கானை யில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு விடுதலைப் புலிகளே காரண மென இராணுவத்தினர் கூறியதாக பிரதேசத் தகவல்கள் தெரிவித்தன.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல