சனி, 11 டிசம்பர், 2010

கிண்ணங்கள் திருடப்பட்டன

டென்னிஸ் உலகின் ஜம்பவானாகத் திகழ்ந்த சாம்ப்ராஸின் வெற்றிக் கிண்ணங்களும் பரிசில்களும் திருட்டுப்போயுள்ளன. டென்னிஸ் வீரரான அமெரிக்காவின் பீட்சாம்ப்ராஸ் டென்னிஸ் அரங்கில் தான் வென்றெடுத்த கிண்ணங்களையும் பரிசில்களையும் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலசிலுள்ள அவரது இல்லத்தில் பாதுகாத்து வந்தார்.

இந்நிலையில் அவர் வென்றெடுத்த கிண்ணங்களில் 13 கிண்ணங்கள் திருட்டுப்போயுள்ளன. இதில் அவர் 1994 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன் சம்பியன் வென்ற கிண்ணமும் அடங்கும்.

இது குறித்து சாம்ப்ராஸ் தெரிவிக்கையில், நான் டென்னிஸ் விளையாடிய போது அதனை எனது பிள்ளைகள் பார்க்கவில்லை. ஆனால் வென்ற கிண்ணங்களை அவர்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தே அவற்றை பாதுகாத்து வந்தேன். இந்நிலையில் அவைகள் இவ்வாறு திருடப்பட்டுள்ளது எனக்கு மனவேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். 14 கிராண்ட் சிலாம் உட்பட 64 போட்டிகளில் இவர் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல