சனி, 11 டிசம்பர், 2010

மகாராணியின் உள்ளாடை ஏலத்தில் விற்பனை

பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிஸபெத்துக்கு 40 வருடங்களுக்குமுன் சொந்தமானதாக இருந்த உள்ளாடையொன்று ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

1968 ஆம் ஆண்டு சிலி நாட்டுக்கு எலிஸபெத் மகாராணியார் விஜயம் செய்தபோது பிரத்தியேக விமானத்தில் அவர் விட்டுச்சென்ற உள்ளாடை இதுவெனக் கூறப்படுகிறது.

இந்த உள்ளாடையில் மகாராணியாரின் முதலெழுத்தான 'E' பொறிக்கப்பட்டுள்ளது. பிரபல பிளே போய்களில் ஒருவரான ஜோசப் டி பிக்ஸ்க் டொப்ரோனி என்பவருக்கு 40 வருடங்களுக்கு முன் சில நண்பர்களால் இந்த உள்ளாடை வழங்கப்பட்டதாம்.

எனினும் இந்த உள்ளாடையை இரண்டாம் எலிஸபெத் மகாராணியார் எப்போதாவது அணிந்தாரா என்பது தெரியவில்லை.

 கடந்த ஜூன் மாதம் டொப்ரோனி இறந்ததையடுத்து அவர் சேகரித்து வைத்திருந்த பொருட்களுடன் இந்த உள்ளாடையையும் அமெரிக்க ஏலவிற்பனை நிறுவனமொன்று  ஏலத்தில் விற்பனை செய்யவுள்ளது.

 பிரிட்டனின் மற்றொரு புகழ்பெற்ற அரசியான விக்டோரியா மகாராணியார் பயன்படுத்திய உள்ளாடையொன்று 2008 ஆம் ஆண்டு 9000 டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இரண்டாம் எலிஸபெத் மகாராணியாரின் உள்ளாடையும் இதே தொகைக்கு விற்பனையாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல