செவ்வாய், 25 ஜனவரி, 2011

‘சூதாட்டம்’ ஆகிப் போன பிரிட்டிஷ் இளவரசர் திருமணம்

இளவரசர் சார்லஸ் மகன் திருமணத்திலும் ஒரு பரபரப்பு, விறுவிறுப்பு தொற்றிக் கொண்டுள்ளது. இது கொஞ்சம் வித்தியாசமான பரபரப்பு. சார்லஸ் மகன் வில்லியம் - கேட் திருமணம் வரும் ஏப்ரல் 29ம் தேதி வெகு விமரிசையாக நடக்க உள்ளது. இந்த திருமணத்தை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது. 

தாய் டயானாவின் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிச்சயதார்த்த வைர மோதிரத்தை வருங்கால மனைவி கேட்டிற்க்கு அணிவித்து அம்மா இல்லாத குறையை தீர்த்துக் கொண்டார் வில்லியம்.

ஆடை முதல் அணிகலன் வரை பல பொருட்களில் இருவரும் இணைந்த போட்டோவை போட்டு பணம் பார்த்துக் கொண்டிருக்கின்றன வியாபார நிறுவனங்கள். இது ஒரு பக்கம் இருக்க, வில்லியம் - கேட் இருவரும் திருமணத்துக்கு பிறகு நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ்வது கடினம்தான் என்ற செய்தியை சிலர் கிளப்பி விட்டுள்ளனர். பட்டிமன்றமாக தொடங்கிய இந்தப் பிரச்னை, இப்போது சூதாட்டமாகவே வளர்ந்து வருகிறது. திருமணமே நடக்காது என்று கோஷ்டி ‘பெட்’ கட்டிக் கொண்டிருக்கிறது.

‘விரைவில் விவாகரத்து செய்வார்கள்’ என்று ஒரு பிரிவும், ‘திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள மாட்டார்கள். நீண்ட காலம் இணைந்து இல்லறம் நடத்துவார்கள்’ என்று மற்றொரு பிரிவும் வரிந்து கட்டுகிறது. இந்த சூதாட்டத்தில் தினம் தினம் ஏராளமானவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். முதல்கட்ட போட்டியிலேயே அதிகபட்சமாக ரூ.22 லட்சம் பெட் கட்டப்பட்டுள்ளது. இந்த தொகை மேலும் உயரும் என்று சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் கூறுகிறார்கள்.

இந்த சூதாட்டத்தில் வில்லியம் - கேட் பற்றி மேலும் பல கேள்விகளும் எழுப்பப்பட்டு சூதாட்டத் தொகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இதற்கு எதிர்ப்பும் வலுத்து வருகிறது. மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை சூதாட்டமாக்குவது தவறு என்கிறார்கள் எதிர்ப்பாளர்கள்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல