செவ்வாய், 25 ஜனவரி, 2011

காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப் போன பெண் மின்சார அதிர்ச்சியூட்டப்பட்டு கொலை!

பாகிஸ்தானில் உள்ள கிராமப்புற மக்களிடம் நீண்டகாலமாக ஒரு வழக்கம் உள்ளது. ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள அவளுடைய குடும்பத்தை சேர்ந்த மூத்த ஆண்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், பஞ்சாயத்து கூடி அந்த பெண்ணுக்கு தண்டனை அளிக்கும்.

இந்த சூழ்நிலையில், பகவல்புர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் சைமா பீபி (வயது 23), ஒரு வாலிபரை காதலித்தார். திருமணம் செய்யவும் முடிவு செய்தார். ஆனால், அவருடைய குடும்ப ஆண்கள் சம்மதிக்கவில்லை.


அதனால் அவர் தன் உறவினர் திலாவார் என்பவருடன் கராச்சிக்கு ஓடிப் போனார். பின்னர் அவரை மீட்டு வந்த உறவினர்கள் பஞ்சாயத்தின் முன் நிறுத்தினர். இதைத் தொடர்ந்து, பஞ்சாயத்து தீர்ப்பின்படி அந்த பெண்ணை சித்திரவதை செய்தும் உடலில் மின்சாரத்தை பாய்ச்சியும் துடிக்க துடிக்க கொலை செய்து புதைத்துவிட்டனர். அவருடைய உடலில் சித்திரவதை செய்த அடையாளங்களும் கழுத்து, பின்பகுதி, கை ஆகிய இடங்களில் எரிக்கப்பட்ட அடையாளங்களும் காணப்பட்டன.

இது குறித்து விசாரித்த பொலிஸாரிடம் தாங்கள் ஏற்பாடு செய்த திருமணத்தில் சைமாவுக்கு விருப்பம் இல்லாததால் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

எனினும் அதன் பின் அவர் தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கிடைத்த தகவலின்படி பொலிஸார் விரைந்து சென்று புதைக்கப்பட இருந்த சைமாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்த ‘கெளரவக் கொலை’ விவகாரத்தில், சைமாவின் தந்தை அப்துல் மஜீத் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பிரதமர் யுசுப் ராசா கிலானி உடனடியாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் ஆண்டுதோறும் கவுரவக் கொலை என்ற பெயரில் நூற்றுக்கணக்கான பெண்கள் கொல்லப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல