செவ்வாய், 25 ஜனவரி, 2011

இந்திய மீனவர் இலங்கையில் தஞ்சம் கோரவுள்ளனர்

இந்திய நாகப்பட்டிண மாவட்ட வேதார்ணயத்திற்கு அருகில் உள்ள புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 500 மீனவர்கள் இலங்கையிடம் தஞ்சம் கோரவுள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய அரசிடமோ, இந்திய கடற்படையிடமோ மீனவர் பாதுகாப்பு பிரச்சினைக்கு தீர்வு இல்லாததனால் நாங்கள் இலங்கையிடம் தஞ்சம் கோர தீர்மானித்துள்ளதாக கிராம பஞ்சாயத்தஞ தலைவர் எம்.கதிர்வேல் தெரிவித்துள்ளார்.

மேலும், 100 வைபர் படகுகளில் அனைத்து மீனவர்களும் கடல் எல்லைக்குச் சென்று இலங்கையிடம் தஞ்சம் கோரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலாவது, மீனவர்கள் பிரச்சினைக்கு ஒரு சரியான தீர்வு கிடைக்குமா என தான் எதிர்பார்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல