செவ்வாய், 25 ஜனவரி, 2011

சென்னையில் உள்ள பௌத்த விகாரை தாக்குதல்

சென்னையில் பௌத்த குருமாரின் சேவை மையம் மீது இனந்தெரியாத நபர்கள், நேற்று இரவு திடீர் தாக்குதல் நடத்தியதில், இலங்கையைச் சேர்ந்த நான்கு பௌத்த குருமார் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சென்னை எழும்பூர், கென்னத் லேனில், மகா போதி சொசைட்டி எனும் பௌத்த குருமாருக்கான சேவை மையம், இலங்கை அரசின் நிதியுதவியுடன் இயங்கி வருகிறது. இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவிலுள்ள புத்த கயா போன்ற ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு வரும் பௌத்த குருமார்கள் இந்த மையத்தில் தங்குவது வழக்கம். இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்த பௌத்த குருமார்களான மைதிலி(50), வஜ்ரதெரோ உள்ளிட்ட நான்கு பேர், நேற்று இரவு இம்மையத்தின் வரவேற்பறையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த 15 பேர் கொண்ட இனந்தெரியாதோர், அவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தியதில் அவர்களின் கை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தடுக்க முயன்ற மையத்தின் நிர்வாகி சமிததேரோவையும், சரமாரியாக தாக்கியது. வரவேற்பறையில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டிருந்த அலுமாரி, அலுவலக அறை, "தொலைக்காட்சி' மற்றும் வாகனங்கள் , ஆகியவற்றையும் அடித்து நொருக்கியது. காயமடைந்தவர்கள், எழும்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த இலங்கை துணை தூதரக அதிகாரிகள் போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். தாக்குதல் நடத்திவிட்டு, தப்பிச் சென்றவர்கள் குறித்து, எழும்பூர் போலீசார் விசாரணைகளை நடத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை உயர்ஸ்தானிகர் - இந்திய அதிகாரிகள் சந்திப்பு!

சென்னையில் இடம்பெற்ற மகா போதி விகாரைத் தாக்குதல் தொடர்பில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவம்சம், இந்திய அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார்.

இச்சந்திப்பின் போது இலங்கையில் இருந்து இத்தாக்குதலுக்கு எதிராக எழும் குரல் குறித்து உயர்ஸ்தானிகர் அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.

இதேவேளை, சம்பவம் குறித்து தமிழக அரசு விசேட கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதல் நடந்த விகாரைக்குச் சென்று மதகுருமாரின் பாதுகாப்பை அவர் உறுதி செய்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல