சனி, 29 ஜனவரி, 2011

வயோதிபத் தம்பதியினர் மீது புங்குடுதீவில் தாக்குதல்

புங்குடுதீவு 10வட்டாரத்திலுள்ள வீட்டில் தனித் திருந்த வயோதிப தம்பதிகள் இருவர் இனந் தெரியா தோரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம் பெற்றுள்ளது.இதில் சுவாமிநாதன் (வயது 72), அவரது மனைவி வரதலக்சுமி (வயது 65) ஆகிய இருவருமே தாக்கப்பட்டவர்களாவர். நேற்று முன்தினம் இரவு குறிப்பிட்ட வீட்டுக்குச் சென்ற நால்வரே இவர்களைத் தாக்கியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஊர் காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் நேற்றுக்காலை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.இத்தாக்குதல் சம்பவம் தொடர் பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப் பட்டு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல