யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டீ.பி. முக்கியஸ்தர் இனந்தெரியாதோரால் சுட்டுகொலை!
யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டீ.பி. )முக்கியஸ்தர் ஒருவர் இன்று காலை பகிரங்க இடத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை ஆனைவிழுந்தான் பிரதேசத்தில் இன்று (29) காலை இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிசாரின் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர் யாழ். மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்குப் பதில் பொறுப்பாளர் இராசரத்தினம் சதீஷ் என்பதாக தற்போது கிடைத்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது பருத்தித்துறை ஆனை விழுந்தான் சந்தியில் அவர்மீது இனந்தெரியாதவர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் அந்த இடத்திலேயே அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக