செவ்வாய், 18 ஜனவரி, 2011

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை இறந்தது தெரியாமல் Facebook கேம் விளையாடிய பெண்

அமெரிக்காவை சேர்ந்தவர் ஷனான் ஜான்சன். 34 வயதான இவர் அங்கு உள்ள கொலராடோ மாநிலத்தில் வசித்து வருகிறார். அவரது 13 மாத ஆண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் விளையாட விட்டு விட்டு இவர் பக்கத்து அறையில் உள்ள Facebook இணையதளத்தில் 'Cafe World' கேம் விளையாடிக்கொண்டு இருந்தார்.

திடீர் என்று அவருக்கு குழந்தையின் நினைவு வந்தது. உடனே பதறியடித்துக்கொண்டு பக்கத்து அறைக்கு சென்றார். அங்கு தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தது. உடனே அவர் அவசர உதவிக்கு போன் செய்தார். அவர்கள் விரைந்து சென்று குழந்தையை ஹெலிகாப்டரில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து போனதாக அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல