வியாழன், 3 பிப்ரவரி, 2011

சுன்னாகத்தில் வயோதிபப் பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்!

சுன்னாகப் பகுதியில் வீட்டில் தனித்திருந்த வயோதிபப் பெண்ணொருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊயிரிழந்தவர் கிட்டப்பா பரமேஸ்வரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

83 வயதுடைய இவர் தனது மகளின் வீட்டுக்கு அருகாமையில் தனித்து வாழ்ந்து வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை இவரது வீட்டில் புனைமூட்டம் காணப்பட்டதனை அடுத்து அயலவர்கள் சென்று பார்த்த போது இவர் எரிந்த நிலையில் காணப்பட்டதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற காவற்துறை அதிகாரியான இவரது கணவர் அண்மையிலேயே மரணமானார் எனவும் இந்தச் சம்பவம் தற்கொலையா? தீ விபத்தா? அல்லது கொலையா என்பது தொடர்பில் காவற்துறை விசாரணைகளை மேற்கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல