வியாழன், 3 பிப்ரவரி, 2011

ஒபாமாவின் மனைவி தன் மகள்களுடன் மீண்டும் இந்தியா வருகிறார்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிச்சல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் முறையாக கணவருடன் இந்தியா வந்தார். மும்பை, டெல்லி ஆகிய நகரங்களுக்கு சென்ற அவர் மீண்டும் தன் மகள்கள் சஷா, மாலியாவுடன் இந்தியா வர இருக்கிறார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனை வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியபோது அவரிடம் இந்த தகவலை ஒபாமாவே தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், இந்தியாவில் தங்கி இருந்த நாட்களை சுகமான அனுபவமாக மிச்சல் கருதினார் என்றும், அவர் தன் மகள்களுடன் மீண்டும் இந்தியா வர விரும்புகிறார் என்றும் ஒபாமா தெரிவித்தார்.

முதல் முறையாக அவர்கள் இந்தியா வந்தபோது அவர்களது மகள்களும் இந்தியா வருவதாக தான் இருந்தது. ஆனால் பள்ளிக்கூட தேர்வுகள் இருந்ததால் அவர்கள் அப்போது இந்தியா வரவில்லை. 2-வது முறை மிச்சல் இந்தியா வரும்போது அவருடன் மகள்களும் இந்தியா வர இருக்கிறார்கள். அவர்கள் எப்போது இந்தியா வருவார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல