வியாழன், 3 பிப்ரவரி, 2011

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரித்தானிய முஸ்லீம் மதகுரு கைது

இரு சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரித்தானியாவைச் சேர்ந்த முஸ்லீம் மதகுரு ஒரு வரை குற்றவாளியாக இனங்கண்டு அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

ஸ்ரோக் ஒன் தரென்ட் எனும் இடத்தைச் சேர்ந்த மொஹமட் ஹனீப்கான் என்ற இந்த 42 வயது முஸ்லீம் மதத் தலைவர் தன் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் வல்லுறவு, பாலியல் வல்லுறவுக்கு முயற்சித்தமை மற்றும் சிறுவர் ஒருவருடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த வழக்கை விசாரித்த ஷிபியல்ட்டிலுள்ள நொட்டிங்ஹாம் கிறவுண் நீதிமன்றம் அவரை குற்றவாளியாக இனங்கண்டுள்ளது.
முஸ்லீம் மத ஸ்தலத்தில் இடம்பெற்ற மாலை நேர வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு வந்த மாணவர்களையே மதகுரு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

முஸ்லீம் மதகுருவால் பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட சிறுவர்கள் தமது பெற்றோரிடம் தமக்கு நேர்ந்த அவலம் குறித்து தெரிவித்ததையடுத்து, அவர்களது பெற்றோர்களாலும் உறவினர்களாலும் மொஹமட் ஹனீப் கான் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்பே அவர் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல